உத்திரமேரூர், ஆக. 23 –
தேமுதிக நிறுவன தலைவர் கேப்டன் விஜயகாந்தின் 70 வது ஆண்டு பிறந்த நாள் விழா ஆகஸ்ட் 25ஆம் தேதி கொண்டாடப் பட உள்ளது. அதனைத்தொடர்ந்து அவ்விழாவனை சிறப்பிக்கும் வகையில் காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் M ராஜேந்திரன் அறிவுறுத்தலின்படியும், உத்திரமேரூர் ஒன்றிய செயலாளர் V. கன்னியப்பன் மற்றும் உத்திரமேரூர் நகர கழக செயலாளர் S ஐயப்பன் தலைமையிலும் காஞ்சிபுரம் மாவட்டம் மகளிர் அணி செயலாளர் P. செல்வி பரசுராமன் மற்றும் மாவட்ட பிரதிநிதி A. மோகனராமன் முன்னிலையிலும், உத்திரமேரூர் ஒன்றிய அவை தலைவர் T. இளையபெருமாள் பொருளாளர் M. சந்திரசேகர் மற்றும் பேரூர் கழக அவைத்தலைவர் V.R ஆறுமுகம் பொருளாளர் V.சீனிவாசன் வழிகாட்டுதலின்படியும் நாகமேடு கிளை கழக செயலாளர் P.பரசுராமன் உத்திரமேரூர் ஒன்றிய விவசாய அணி துணை செயலாளர் N.பன்னீர்செல்வம் மருத்துவம் பாடி ஊராட்சி செயலாளர் K. பெருமாள் ஆகியோரின் உதவியோடு மருத்துவான்பாடி ஊராட்சி சார்பாகவும் சுவர் விளம்பரம் நகர் முழுவதும் ஆங்காங்கே வெகு விமர்சையாக எழுதி வருகின்றனர்.