திருவாரூர், ஜன. 18 –
திருவாரூர்மாவட்டம், குடவாசல்அருகேவுள்ள செம்மங்குடி மேல்நிலைப்பள்ளியில் கடந்த 1993 ஆம் ஆண்டு கல்விப் பயின்ற மாணவ மாணவியர்கள் நான்காம் ஆண்டாக நேர்முக சந்திப்பு நிகழ்ச்சி இன்று திருவாரூரில் உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் இருந்து முன்னாள் மாணவர்கள் வந்து கலந்து கொண்டு தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டது அந்நிகழ்வில் பங்கேற்ற அனைவரிடத்திலும் நெகிழ்ச்சியைஏற்படுத்தியது.
மேலும் இந்நிகழ்வில் தங்களுக்கு கல்விப் பயிற்றுவித்த ஆசான்களுக்கு சால்வை அணிவித்தும், நினைவு பரிசு வழங்கியும் அவர்களை கௌரவப்படுத்தினார்கள்.
இந்நிகழ்வினை பற்றி மாணவர்கள் மனம் உருகி தங்கள் தற்போதய அனுபவங்களையும் 1993 ஆம், ஆண்டு படிக்கும் போது உள்ள அனுபவங்களையும் மகிழ்ச்சியோடு உரை நிகழ்த்தி அனைவரிடத்திலும் பகிர்ந்துக் கொண்டனர்.
அதேபோல தங்கள் ஆசான்களும் ஆனந்த கண்ணீருடன் தங்களிடம் படித்த மாணவ மாணவியர்கள் நன்றி மறக்காமல் இந்த சந்திப்பை ஏற்படுத்திய இத்தருணம் தங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியானதாகும் என்றும், தற்போது உள்ள மாணவ மாணவிகள் இது போன்ற நடந்து கொள்வதில்லை என்றும் பேசினார்கள்.
தொடர்ந்து, தேனீர் விருந்துடன் கலந்து கொண்ட அனைவருக்கும் சென்னையிலிருந்து இந்நிகழ்வில் பங்கேற்க வருகை தந்த பேராசிரியர் புஷ்பலதா நினைவு பரிசினை வழங்கினார். மதியம் ஆசான்களோடு அமர்ந்து அருசுவை உணவு பகிர்ந்துக் கொள்ளப்பட்டு, சுவை மாறாத நினைவுகளோடு இந்நிகழ்ச்சி நிறைவு பெற்றது.























