நன்னிலம், மார்ச். 18 –
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் பகுதியில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் பெறப்பட்ட நெல் மூட்டைகளை ஏற்றிச் செல்லும் லாரிகளுக்கு அரசு நிர்ணயித்த வாடகை முழுமையாக கிடைக்கவில்லை என லாரி உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் லாரி இயக்க நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். இதனால் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் தேக்க நிலை ஏற்பட்டு வருகிறது.
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் பகுதிகளில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடமிருந்து பெறப்பட்ட நெல் மூட்டைகளை, மற்ற மாவட்டங்களுக்கு அரவைக்காக பேரம் இரயில் நிலையத்திலிருந்து அனுப்பி வைக்கப்படுகிறது. மேலும் இதற்காக அந்தநெல் மூட்டைகளை கொள்முதல் நிலையத்திலிருந்து இரயில்வே நிலையத்திற்கு எடுத்துச் செல்ல 200க்கும் மேற்பட்ட தனியார் வாடகை லாரிகள் ஒப்பந்த அடிப்படையில் இயங்கி வருகிறது.
இந்நிலையில் லாரிகளுக்கு அரசு நிர்ணயித்த வாடகையை லாரி உரிமையாளர்களுக்கு கடந்த மாதம் வரை நேரடியாக வழங்கி வந்த நன்னிலம் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம், தற்பொழுது மார்ச் 1-ஆம் தேதி முதல் இடைத்தரகர்கள் மூலமாக வாடகை வழங்கப்படுவதால் தங்களுக்கு அரசு ஒப்பந்த அடிப்படையில் நிர்ணயித்துள்ள வாடகை முழுமையாக தங்களுக்கு கிடைக்கவில்லை என லாரி உரிமையாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
மேலும் இதற்காக திருவாரூர் மாவட்ட நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் முது நிலை மண்டல மேலாளரும், இடைத்தரகர்களுக்கு உடந்தையாக இருந்து செயல் பட்டு வருதாகவும், மேலும் அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
மேலும் இதனால் ஏற்படும் பாதிப்பால், இதனை நம்பியுள்ள 300க்கும் மேற்பட்ட ஓட்டுநர்கள், 200-க்கும் மேற்பட்ட லாரி உரிமையாளர்கள் மற்றும் 350-க்கும் மேற்பட்ட கூலி தொழிலாளிகள் என அனைவரும் தங்களது வாழ்வாதாரங்களை இழந்து வருவதாக புகார் தெரிவிக்கின்றனர்.
மேலும் அவர்கள் அரசு நிர்ணயித்த வாடகையை இடைத்தரகர்கள் இல்லாமல் மீண்டும் நேரிடையாக தங்களுக்கு வழங்க வேண்டும் என, லாரி உரிமையாளர்கள், ஓட்டுநர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
அக்கோரிக்கையை அரசின் கவனத்திற்கு எடுத்துச் செல்லும் விதமாகவும் மேலும் அதனை அரசு உடனே நிறைவேற்றித் தரவேண்டும் என்பதை வலியுறுத்தியும் இந்த முதற்கட்ட அடையாள லாரிகள் இயக்க நிறுத்தப் போராட்டம் நடைப்பெறுவதாக அவர்கள் தெரிவித்தனர்.
மேலும் இந்த லாரி இயக்க நிறுத்தப்போராட்டத்தால் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில், நெல் மூட்டைகள் தேக்க நிலை ஏற்பட்டுள்ளது. எனவும் மேலும் இந்நிலை தொடர்ந்தால், திறந்தவெளி சேமிப்பு கிடங்குகளில் உள்ள நெல் மூட்டைகள் மழையில் நனைந்து பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளது எனவும் அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
பேட்டிகள்:
1.ஈ.வே.ரா.சூரன்-ஓட்டுனர்
2.கே.பி. குமார்- ஓட்டுனர்
பேரளம்.






















