காஞ்சிபுரம், மார்ச். 01 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்..
தமிழ்நாடு பள்ளி மாணவர்களுக்கான 12ம் வகுப்பு பள்ளிப் பொதுத்தேர்வு இன்று தொடங்கும் நிலையில், காஞ்சிபுரம் ஓர்க்கைப் பகுதியில் உள்ள பிரபல தனியார் பள்ளி மாணாக்கர்கள் தங்கள் பள்ளி தாளாளர் மற்றும் ஆசிரியர்களின் பாதம் தொட்டு வணங்கி அவர்களின் மனப்பூர்வமான ஆசிப்பெற்று மிகுந்த குதுகலத்துடன் தேர்வு அச்சம் இன்றி தேர்வெழுதச் சென்றார்கள்.
காஞ்சிபுரம் மாவட்டம், இன்று தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு இன்று முதல் தொடங்குகிறது, அதுப்போன்று காஞ்சி மாவட்டத்தில் 5750 மாணவர்களும், 6791 மாணவிகள் என மொத்தம் 12541 மாணவ மாணவிகள் 12ம் வகுப்பு பொதுத் தேர்வினை எதிர் கொள்கின்றனர்.
இந்நிலையில் காஞ்சிபுரம் ஓரிக்கை பகுதியிலுள்ள பிரபல தனியார் பள்ளி ஒன்றில் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் அப்பள்ளி மாணவ,மாணவிகள் பய பக்தியுடன் இறை வணக்கம் செலுத்தி விட்டு நன்றாக தேர்வு எழுத வேண்டும் என பிராத்தனையில் ஈடுபட்டனர்.
அதன் பின் பள்ளியின் தாளாளர் மற்றும் ஆசிரியர்களின் பாதம் தொட்டு வணங்கி அவர்களின் மனப்பூர்வமான ஆசிப் பெற்று, எவ்வித தேர்வு அச்சம் நீங்கி, மிகுந்த மகிழ்வுடன் தேர்வு அறைக்கு சென்றனர்.
பொதுவாகவே அரசு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்கள் மத்தியில் சற்று தேர்வு பயம் இருக்கும் சூழலில் தாங்கள் நன்றாக படித்த காரணத்தினாலும், ஆசிரியர்களின் நம்பிக்கை ஊட்டும் வார்த்தைகளினாலும் இப்பள்ளி மாணவர்கள் எவ்வித தேர்வு பயமின்றி மகிழ்ச்சியுடன் தேர்வினை எதிர் கொள்ள தேர்வு அறைக்கு சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.