காஞ்சிபுரம், செப் . 17 –

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெற உள்ள ஊரக உள்ளாட்சி தேர்தலில் 3-வது நாளான இன்று 724 வேட்பாளர்கள் பல்வேறு பதவிகளுக்காக வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் அக்டோபர் 6ஆம் தேதி மற்றும் அக்டோபர் 9ஆம் தேதி என இரு தேதிகளில் ஊரக உள்ளாட்சி தேர்தல் ஐந்து ஒன்றியங்களில் நடைபெற உள்ளது.

இதற்கான வேட்பு மனு கடந்த 15ஆம் தேதி துவங்கியது. முதல் நாளில் 32 மனுக்களும், நேற்று 362 வேட்புமனுக்கள் பெறப்பட்டது.

இன்று 3-வது நாளில் காலை முதலே வேட்பாளர்கள் அந்தந்த ஒன்றிய அலுவலகங்களில் ஆதரவாளர்களுடன் குவிந்து தங்கள் வேட்புமனுக்களை சரிபார்த்து வேட்பு மனுக்களைத் தாக்கல்  செய்துள்ளனர்

அவ்வகையில் , மாவட்ட ஊராட்சி வார்டு பதவிக்கு இருவரும், ஒன்றியக் குழு உறுப்பினர்களுக்கு 3 பேரும், கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு 95 நபர்களும்

கிராம ஊராட்சி வார்டு களுக்கு 624 நபர்கள் என மொத்தம் 724 பேர் மூன்றாம் நாளான இன்று தங்கள் வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளனர்.

இது வரை மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் உள்ள 2321 மொத்த பதவிகளுக்கு 1118பேர் வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளனர். இன்னும் 4நாட்கள் கால அவகாசம் உள்ளதால் பல ஆயிரம் பேர் மனு அளிக்க வாய்ப்பு உள்ளது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here