கும்பகோணம், செப்.30 –
கும்பகோணத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் 9 ம் தேதி நடக்க உள்ளது. வாக்குச் சாவடியில் பணியாற்ற உள்ள 48 பேருக்கு தேர்தல் அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்புகள் ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ராசன் சாமிநாதன் தலைமையில் நடைபெற்றது.
இதையொட்டி, கும்பகோணம் ஒன்றியம் சுந்தர பெருமாள் கோவில் கொற்கை மருதநல்லூர் வாக்குச்சாவடிகளில் பணியாற்ற உள்ள ஆசிரியர்கள் அரசு ஊழியர்களுக்கு தேர்தல் பணியில் ஈடுபடும் போது தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள பயிற்சியை முழுமையாக பயன்படுத்தி, தேர்தல் பணிகளை சிறப்பாக செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளனர். இந்த பயிற்சிக்கூட்டத்தில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சந்தானம் ராஜரத்தினம் மற்றும் ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் கலந்து கொண்டனர்.