சென்னை, ஜன. 11 –

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் மூலம் நடப்பாண்டில் இலவச மின்சாரம் வழங்கப்பட்ட ஐம்பாதாயிரம் விவசாய பயனார்களில் 50 ஆயிரமான பயனாளி உட்பட ஐந்து விவசாயிகளுக்கு இன்று மின் இணைப்பு ஆணைகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கும் நிகழ்ச்சி தலைமைச்செயலத்தில் நடைப்பெற்றது.

தமிழ்நாட்டு விவசாயிகளின் வாழ்வு மேம்படவும் மேலும் உணவு உற்பத்தியை பெருக்கிடும் நோக்கத்தோடும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பொறுப்பேற்றவுடன், ஒரு லட்சம் விவசாயிகளுக்கு ஒராண்டில் இலவச மின்சாரம் வழங்கப்படும் என அறிவித்ததுடன் நில்லாமல், ஆறே மாதத்தில் முன்பிருந்த எந்த அரசும் செய்திடா சாதனையை ஒரு லட்சம் இலவச மின் இணைப்புகளை விவசாயிகளுக்கு வழங்கியது.

மேலும் தமிழ்நாட்டில் பசுமைப் புரட்சியை ஏற்படுத்திடும் விதமாக 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டு எரி சக்தித்துறை மானியக் கோரிக்கையில் நடப்பு நிதியாண்டிலும் மேலும் ஐம்பாதாயிரம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்படும் என அறிவித்தது.

அதன்படி கடந்த 11-11-2022 ஆம் தேதியன்று கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் நடைப்பெற்ற விழாவில் முதலமைச்சர் 50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கிடும் திட்டத்தினை தொடங்கி வைத்தார்.

மேலும் அன்றைய தினமே 20 ஆயிரம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்குவதற்கான ஆணைகளையும் வழங்கப்பட்டது. தொடர்ந்து அன்றையே தினமே மேலும் இத்திட்டம் நூறுநாட்களில் முடிக்கப்படும் என அறிவித்தார்.

ஆனால் இத்திட்டத்தினை தொடங்கி வைத்த 61 நாட்களிலேயே அதாவது கடந்த 09-01-2023 ஆம் தேதியன்றே ஐம்பாதாயிரம் விவசாயிகளுக்கும் இத்திட்டத்தின் கீழ் இலவச மின்சாரம் வழங்கி மீண்டுமொரு சாதனையை இவ்வரசு செய்து முடித்துள்ளதாக அரசு தரப்பு வட்டாரம் தெரிவிக்கிறது.

மேலும் இத்திட்டத்தின் வாயிலாக தமிழ்நாட்டில் பாசனப்பரப்பு விரிவடைந்து, விளைச்சலும் அதிகரித்து உற்பத்தியும் பெருகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கிறது.

மேலும் இன்றைய தினம் தலைமைச் செயலகத்தில் நடைப்பெற்ற இந்நிகழ்வின் போது, மின்சாரம்,மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் வி.சந்தில்பாலாஜி, எரிசக்தித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ரமேஷ்சந்த்மீனா, கூடுதல் தலைமைச்செயலாளர் / தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் ராஜேஷ்லக்கானி, இயக்குநர் (பகிர்மானம்) மா.சிவலிங்கராஜன் ஆகியோர் உடனிருந்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here