காஞ்சிபுரம், பிப். 22 –

தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்..

காஞ்சிபுரம் மாவட்டம், ஓரகடத்திலிருந்து, வாகனங்கள் படப்பையை நோக்கி வந்து கொண்டிருந்த போது, படப்பை அடுத்த சாலமங்கலம் அருகே சாலையில் திடீரென அடுத்தடுத்து மூன்று வாகனங்கள் பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. அவ்விபத்தில் அரசு பேருந்து, தனியார் கம்பெனி பேருந்து, மற்றும் லாரி என மூன்று வாகனங்கள் அவ்விபத்தில் சிக்கியது.

மேலும் அவ்விபத்தில் அரசு பேருந்து நடத்துனருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. மற்றும் தனியார் கம்பெனி பேருந்தில் வந்த 10க்கும் மேற்பட்டவர்களுக்கு சிறு காயம் ஏற்பட்டு ஆம்புலன்ஸ் மூலம் அனைவரும் சிகிச்சைக்காக மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும் இந்த விபத்தினால் வண்டலூர் வாலாஜாபாத் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது..

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here