திருவள்ளூர் செப். 30 –

திருவள்ளூர் அய்யனார் அவென்யூ பகுதியைச் சேர்ந்தவர் இமானுவேல் ராஜசேகர். அவர் தனது கைப்பேசியில் பேசிக் கொண்டே ஜே.என்.சாலையில் அமைந்துள்ள தங்க நகை கடை அருகே சென்று கொண்டிருந்தாராம். அப்போது, இருசக்கர வாகனத்தில் பின்னால் வந்த 3 பேர் ரூ.10 ஆயிரம் மதிப்பிலான கைப் பேசியை பறித்துக் கொண்டு தப்பி ஓடினர். 

அப்பொழுது அந்த வழியாக சென்ற திருவள்ளூர் ஆயுதப்படை காவலர் முருகேசன் இதைப் பார்த்ததும், இருசக்கர வாகனத்தில் துரத்திச் சென்று ரயில்வே சாலை அருகே மடக்கி பிடித்த போது, இளைஞர்கள் 3 பேரும் வாக்குவாதம் செய்து அவரை தாக்கியுள்ளனர். 

அதை சமாளித்து 2 பேரை பிடித்து பறித்து சென்ற கைபேசியை கைப்பற்றினார். ஒருவர் மட்டும் வாகனத்தில் தப்பினார். இது தொடர்பாக திருவள்ளூர் நகர் காவல் நிலைய போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கவே ஆய்வாளர் ரவிக்குமார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து 2 பேரையும் பிடித்து கைப்பேசி பறிமுதல் செய்து விசாரித்தார்.

பின்னர் விசாரணையில் ராஜாஜிபுரம் ஜெயராமனின் மகன் கஜேந்திரன்(22) என்பதும், கொலை வழக்கு மற்றும் கொலை முயற்சி, வழிப்பறி வழக்குகள் நிலுவையில் உள்ளது. அதே பகுதியில் கலைஞர் நகர் குமார் மகன் மதன்குமார் (22) வழிப்பறி வழக்குகள் நிலுவையில் உள்ளது. மேலும், தப்பியோடிய கோயில்பதாகை (23) என்பதும் வழிப்பறி வழக்கு உள்ளதும் தெரிவந்தது. இது தொடர்பாக இமானுவேல், ராஜசேகர், ஆயுதப்படை காவலர் முருகேசன் அளித்த புகாரின் பேரில் 2 பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜார்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதில் உயிரை பொருள்படுத்தாமல் துரத்திச் சென்று திருடர்களை பிடித்து கைப்பேசியை கைப்பற்றி சிறப்பாக செயல்பட்ட வீர தீரச் செயல் புரிந்த ஆயுதப்படை காவலர் முருகேசனை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் நேரில் அழைத்து அவருக்கு ரூ.1000 வெகுமதி வழங்கி, இது போன்ற செயல்கள் காவல்த்துறையின் மதிப்பை பொதுமக்களிடையே உயர்த்த அனைத்து காவலர்களும் முருகேசனை போல அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்பட வேண்டுமென பாராட்டினார். 

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here