கும்பகோணம், பிப். 17 –

தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் …

ரூ.31.7624 கோடி மதிப்பிலான தமிழ்நாடு அரசின் புறம்போக்கு நிலத்தில் சுமார் நூற்றாண்டுகளை தாண்டி அப்பகுதியில் வாழ்ந்து வந்த 170 குடும்பங்குளுக்கு வீட்டுமனை பட்டா வழங்கும் விழா கும்பகோணம் அருகேவுள்ள திருபுவனத்தில் நடைப்பெற்றது.

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம், திருவிடைமருதூர் தாலுகா, திருபுவனத்தில் அரசு புறம்போக்கு நிலத்தில் சுமார் நூறாண்டுகளுக்கு மேல் பட்டா இல்லாமல் குடியிருந்து வந்த 170 குடும்பங்களுக்கு சுமார் ரூ. 31 கோடியே 76 லட்சத்து 24 ஆயிரத்து 440 மதிப்பீட்டிலான இலவச வீட்டு மனை பட்டாவை மாவட்ட ஆட்சியர் தலைமையில் அரசு தலைமை கொறடா கோ.வி.செழியன் வழங்கினார்.

திருப்புவனம் பகுதியில் சுமார் 100 ஆண்டுகளுக்கு மேலாக குடியிருந்து வரும் 170 நபர்களுக்கு 6, 83.0 ஹெக்டேர் பரப்பளவிலான அரசு புறம்போக்கு நிலத்திற்கான, இலவச வீட்டு மனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி திருபுவனம் தீகோ சில்க்ஸ் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் உள்ள கலையரங்கத்தில் மாவட்ட ஆட்சியர் தீபக் ஜோகப், தலைமையில் நடைபெற்றது.

மேலும் இந்நிகழ்ச்சியில் மாநிலங்களவை உறுப்பினரும் மாவட்ட செயலாளருமான கல்யாணசுந்தரம், அரசு தலைமை கொறடா கோவி செழியன், மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம், மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன், கோட்டாட்சியர் பூர்ணிமா, வட்டாட்சியர் பாக்யராஜ், திருவிடைமருதூர் ஒன்றிய பெருந்தலைவர் சுபா திருநாவுக்கரசு, பேரூராட்சி துணை தலைவர் சுந்தர ஜெயபால், திருபுவனம் பேரூராட்சி தலைவர் குமுதவள்ளி கோவிந்தன், தீகோ சில்க்ஸ் பள்ளி தாளாளர் பஞ்சநாதன், மற்றும் நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here