திருவாரூர், மார்ச். 09 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ்
திருவாரூர் மாவட்டம் 33 லட்ச ரூபாய் மதிப்பிலான உயர் கோபுர நிழற்குடையை அடிக்கல் நாட்டு விழா நடைப்பெற்ற திருவாரூர் ஒன்றிய பெருந்தலைவர் தேவா பணியினைத் தொடங்கி வைத்தார்.
திருவாரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாவூர் கடைவீதியில் 33 இலட்சம் ரூபாய் மதிப்பிலான உயர் கோபுர நிழற்குடை அமைக்கும் பணியை திமுக ஒன்றிய செயலாளரும் திருவாரூர் ஒன்றிய பெருந்தலைவருமான தேவா தலைமையில் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் மன்னார்குடி கிழக்கு ஒன்றிய செயலாளர் குமரேசன், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் கருணாகரன் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.





















