திருவாரூர், மே. 11 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே.நாகரஜ் …
திருவாரூர் அருகே பாஜக பிரமுகர் மர்ம நபர்களால் வெட்டபட்ட வழக்கில் குற்றவாளிகளை 24 மணி நேரத்திற்குள் கைது செய்து, மாவட்ட காவல்துறை அதிரடி நடவடிக்கை. மேற்றொண்டது. மேலும் மேலும் அவ்வழக்கில் முதல் குற்றவளியும் முக்கிய குற்றவாளியாகவும் கருதப்படும் A 1 குற்றவாளி பாஜக மாவட்ட தலைவர் பாஸ்கரை இன்று காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருவாரூர் அருகே பாஜக நிர்வாகி மர்மநபர்களால் தாக்கப்பட்ட வழக்கில் குற்றவாளிகளை 24 மணி நேரத்திற்குள் கைது செய்து மாவட்ட காவல்துறை நேற்று அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. .திருவாரூர் அருகே குடவாசல் காவல் சரகத்திற்கு உட்பட்ட அகர ஓகைபாலம் அருகில் நேற்று முன்தினம் காவனூர் வெள்ளாளர் தெருவை சேர்ந்த பாலச்சந்திரன் என்பவரது மகன் மது என்கின்ற மதுசூதனன் (40) அப்பகுதியில் இருந்த போது, இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் அரிவாளால் வெட்டியதில் படுகாயம் அடைந்து திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அதன் பிறகு தற்போது தஞ்சை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகிறார்.
மேலும் அவர் பாரதிய ஜனதாக் கட்சியின் முன்னாள் மாவட்ட விவசாய அணி தலைவராக இருந்து வந்துள்ளார். தற்போது அவர் அந்தக் கட்சியில் எவ்விதப் பதவிலும் இல்லாமல் அடிப்படை உறுப்பினாரக மட்டுமே இருந்து வருகிறார்.
இந்நிலையில் அவரது மனைவி ஹரிணி கொடுத்த புகாரின் பேரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உத்தரவின் படி குடவாசல் காவல் நிலையத்தில் கொலை முயற்சி வழக்குபதிவு செய்யப்பட்டு துணைகாவல் கண்காணிப்பாளர் சரவணகுமார் மேற்பார்வையில் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தீவிரமாக தேடிவந்தனர்.
மேலும் அவ்வழக்கின் முதல் கட்ட விசாரணை மதுசூதனன் தாக்கப்பட்ட நேரத்தில் சம்பவ இடத்தில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளில் சந்தேகத்திற்கு இடமாக இருந்த கும்பகோணம் பகுதியை சேர்ந்த பையா சரவணன் என்கின்ற சரவணன் வயது 24. திருவாரூர் காட்டூர் காமராஜர் தெருவை சேர்ந்த பாரதிய ஜனதா விளையாட்டுதிறன் மேம்பாட்டு மாவட்டத் தலைவர் ஜெகதீசன் வயது 30 ஆகிய இருவரையும் தனிப்படையினர் பிடித்து விசாரணை மேற்கொண்டதில் ஜெகதீசன் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் மதுசூதனன் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பிஜேபி கட்சியில் பொறுப்பில் இருந்ததாகவும் அப்போது அந்தக் கட்சியின் மாவட்டத் தலைவர் பாஸ்கர் மற்றும் கட்சியின் மாவட்ட பொதுச் செயலாளர் செந்திலரசன் ஆகியோருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கட்சியின் பதவியினை ராஜினாமா செய்து விட்டு தற்போது கட்சியில் உறுப்பினராக மட்டுமே இருந்து வருவதாகவும், மேலும் அவர் சமூக வலைதளத்தில் அக்கட்சியின் மாவட்ட தலைவர் உள்ளிட்ட நிர்வாகிகள் குறித்து அவதூறான கருத்துக்களை பதிவிட்டு பகிர்ந்து வந்தததில் கோபமடைந்த பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட தலைவர் பாஸ்கர் மாவட்ட பொதுச் செயலாளர் செந்திலரசன் ஆகியோர் மதுசூதனனை ஏதாவது செய்ய வேண்டும் என கூறியதாகவும்,
அதன் அடிப்படையில் கூலிபடையினர் சேர்த்துக் கொண்டு இந்தக் கொலை முயற்சி சம்பவம் நடந்ததாக போலீசாரின் விசாரையில் தெரிவித்துள்ளார்.
மேலும் சரவணன், ஜெகதீசன் ஆகிய இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து போலீசார் அவர்கள் இருவரையும் கைது செய்தனர். மேலும் இந்தவழக்கில் தலைமறைவாக உள்ள நபர்களை 4 தனி படைகள் அமைத்து தீவிரமாக போலீசார் தேடிவருகின்றனர். மேலும் சம்பவம் நடந்து 24 மணி நேரத்திற்குள் குற்றவாளிகளை காவல்துறை கைது செய்தது குறிப்பிடத்தக்கது.
குற்றவாளிகளை கைது செய்த தனிப்படையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வெகுவாக பாராட்டினார் மேலும் இது போல் சட்டவிரோத செயல்கள் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்த நிலையில் இந்த கொலை முயற்சி வழக்கில் ஏ1 குற்றவாளியான பாஜக மாவட்ட தலைவர் பாஸ்கர் கைது செய்யப்பட்டு விட்டதாகவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.



















