திருத்துறைப்பூண்டி, மார்ச். 06 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் கு.அம்பிகாபதி
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி வட்டம், ஆதிரங்கம் (சேகல்) கிராமத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து வரும், அருள்மிகு ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன், ஸ்ரீ பெரிய தம்பிரான், ஸ்ரீ அகோர வீரபத்திரன், ஸ்ரீ இருளன் ஸ்ரீ பெரியநாயகி ஆலய மகா சிவராத்திரி பால்குடம் மற்றும் முதன் முறையாக செடில் காவடிகளுடன் ஊர்வலமும், அன்னதானம் வழங்கும் திருவிழா மாசி மாதம் 25 ஆம் தேதி 8. 3 .2024 வெள்ளிக்கிழமை வெகு விமர்சையாக நடைபெற உள்ளது.
அனைத்து பகுதி பொதுமக்கள் பக்தர்கள் கலந்துக்கொண்டு மகா சிவராத்திரி திருவிழாவில் பங்கெடுக்க வேண்டும் என ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி மருளாளிகள் அறக்கட்டளை சார்பில் அன்போடு அழைப்பு விடுத்துள்ளனர். காலை துவங்கி இரவு வரை கோவில் மருளாளிகள் அறக்கட்டளை சார்பில் சுமார் 5000 பக்தர்களுக்கு அன்னதானம் நடைபெற உள்ளதாக தெரிவித்துள்ளனர்.























