கும்பகோணம், ஆக. 26-

கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள சுவாமிமலையில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் அவ்வியக்கத்தின் 29 ஆம் ஆண்டு தொடக்க விழாவினை அப்பகுதிகளில் உள்ள அக் கட்சியின் கொடிக்கம்பத்தில் புதிய கட்சி கொடியினை ஏற்றி வைத்தும் தொண்டர்கள் மற்றும்பொதுக்களுக்கு இனிப்புகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கி வெகுச் சிறப்பாக அவ்விழாவினைக் கொண்டாடினார்கள்.

தமுமுக என அழைக்கப்படும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் என்பது, முஸ்லிம் மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காகத் தொடங்கப்பட்ட ஒரு இயக்கமாகும். மேலும் அவ்வியக்கம் கடந்த 1995 ஆம் ஆண்டு ஆகத்து 1 ஆம் தேதியன்று, பேரா. ஜவாஹிருல்லா, பி. ஜைனுல் ஆபிதீன், எஸ்.எம். பாக்கர், செ.ஹைதர்அலி, குணங்குடி ஹனீபா போன்றவர்களால் தொடங்கப்பட்டது.

மேலும் அவ்வியக்கத்தின் சார்பில் தமிழகம் முழுவதும் 184 அவசர மருத்துவ ஊர்திகளுடன் அனைத்து மக்களுக்கும் சேவையாற்றும் ஒரு அமைப்பாகும்.

இந்நிலையில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் 29 ம் ஆண்டு தொடக்க விழாவினை முன்னிட்டு மாநில தலைவரும் பாபநாசம் சட்டமன்ற உறுப்பினருமான ஜவாஹிருல்லா, தலைமையில் கட்சி கொடியேற்றி பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கி மற்றும் 30 நபர்களுக்கு அரிசி, காய்கறி, பெட் சீட்டை, உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

தொடர்ந்து, பேரூராட்சி பகுதியில் சிறப்பாக பணியாற்றிய 4 பேருக்கு சால்வை அணிவித்து நினைவு பரிசு வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாநில துணை பொதுச் செயலாளர் பாதுஷா, மாவட்ட தலைவர் ஹிபாயத்துல்லா, பொருளாளர் பக்குருதீன், மாவட்ட துணை செயலாளர் வீரமணி, பேரூர் நிர்வாகிகள் புர்கான், அசாருதீன், ஹாஜா மைதீன், சிராஜுதீன், மற்றும் நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here