திருவொற்றியூர், மார்ச். 27 –

இன்று திருவொற்றியூர் மெட்ரோ ரயில் நிலையம் அருகில் நடமாடும் இரத்த தான முகாம் நடைப்பெற்றது. இம்முகமினை திருவொற்றியூர் கிளை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மற்றும் K,M,C அரசு பொது மருத்துவமனை இணைந்து நடத்தியது.

இம் மாபெரும் இரத்த தான முகாமினை சிறப்பு விருந்தினராக பங்கேற்ற திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் கே பி சங்கர் இரத்த தான முகாமை துவக்கி வைத்தார். இதில் அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் ஆர்வத்துடன் கலந்துக் கொண்டு 50 யூனிட் அளவிலான இரத்ததானம் வழங்கினார்கள்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here