கும்பகோணம், மார்ச். 09 –

தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம், தமிழ்நாட்டில் மகாசிவராத்திரியை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் மகா சிவராத்திரி விழா நேற்று வெகுச் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

அதன் ஒரு பகுதியாக கும்பகோணம் மாநகரில் உள்ள ஆதிகும்பேஸ்வரர் திருக்கோயிலில், நாட்டியாஞ்சலி அறக்கட்டளை சார்பில் மகா சிவராத்திரியை முன்னிட்டு சந்திரசேகர் மூப்பனார் தலைமையில் நாட்டியாஞ்சலி நடைபெற்றது.

அந்நிகழ்ச்சியினை நாராயணி நிதி லிமிடெட் நிறுவனர் கார்த்திகேயன், குத்து விளக்கு ஏற்றி நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். சிட்டி யூனியன் வங்கி மேலாண் இயக்குனர் காமகோடி, மேலாளர் பாலசுப்ரமணியன், நாட்டியாஞ்சலி பொறுப்பாளர்கள் ராஜகோபாலன், சுரேஷ், மற்றும் நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் உள்ளிட்டோர் அச்சிறப்பு மிகு நிகழ்வில் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து நேற்று தொடங்கி மூன்று நாட்கள் நடைபெற உள்ள நாட்டியாஞ்சலி நிகழ்ச்சியில் கும்பகோணம், சென்னை, யு.எஸ்.ஏ. சிங்கப்பூர், ஐதராபாத், துபாய் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து சுமார் 300 க்கும் மேற்பட்ட நடன கலைஞர்கள் கலந்து கொண்டு நடனம் ஆடி விழாவினை சிறப்பித்தனர்.

அதில் முதல் நாள் நிகழ்ச்சியில் நடிகர் சொர்ணமால்யா, கலந்து கொண்டு நடனம் ஆடினார்.  இன்று மற்றும் நாளை மறுநாள் குச்சிப்புடி, கதக்களி உள்ளிட்ட பல்வேறு நடனக் கலைஞர்கள் கலந்து கொண்டு நடனம் ஆடுகிறார்கள். சிவபெருமானை பூஜிக்கும் பாடல்களுடன் சிறுமியர்களின் பரதநாட்டியமும் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தன. இதில் ஏராளமான இசை ஆர்வலர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் கலந்துகொண்டு நிகழ்ச்சிகளை கண்டு ரசித்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here