திருவள்ளூர், அக். 7 –

திருவள்ளூர் மாவட்ட காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பாதிரிவேடு காவல் நிலையத்தில், கும்மிடிப்பூண்டி ஒன்றியக்குழு தலைவரும், ஈகுவார்பாளையம் ஊராட்சி மன்ற தலைவரின் கணவரும் ஒருவர் மீது ஒருவர் குற்றம் கூறி நடவடிக்கை எடுக்க வேண்டி புகார் மனு கொடுத்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம் ஈகுவார் பாளையத்தில் வசிக்கும் கும்மிடிப்பூண்டி ஒன்றியகுழு தலைவருமான சிவக்குமார் என்பவர் காவல் நிலையத்தில் கொடுத்துள்ள புகாரில் கடந்த அக் 2 ஆம் தேதியன்று சித்தூர் நத்தம் கிராமத்தில் காலை 11 மணிக்கு நடைப்பெற்ற கிராம சபைக் கூட்டத்தில் கலந்துக்கொண்டு கிராம வளர்ச்சிப் பணிகள் பற்றி பேச முற்பட்ட போது, தன்னை வேறு சமூகத்தை சார்ந்த உஷா மற்றும் அவரது கணவர் ஸ்ரீதர் இருவரும் தன்னை பேசவிடாமல் தடுத்து, தனை கைகளால் அடித்து கொல்ல முயன்றதாகவும், மேலும் தான் ஒரு பட்டியல் இனத்தைச் சேர்ந்தவன் என்று என்னை ஜாதி நோக்கத்துடன் திட்டமிட்டு தீய நோக்கத்துடன் அவமானம் ஏற்படுத்தியதாகவும் அவர் அப்புகார் மனுவில் கூறிவுள்ளார். மேலும் அவர்கள் இருவர் மீதும் நடவடிக்கை எடுக்கமாறு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து, அதேப் பகுதியில் வசிக்கும் ஈகுவார் பாளையம் ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் ஸ்ரீதர் என்பவர் பாதிரிவேடு காவல் நிலையத்தில் கொடுத்துள்ள புகார் மனுவில், கடந்த அக் 2 காந்தி ஜெயந்தி அன்று காலை 11 மணிக்கு சித்தூர் நத்தம் கிராமத்தில் நடந்த கிராம சபைக் கூட்டத்தில் கும்மிடிப்பூண்டி ஒன்றியக் குழு பெருந்தலைவர் கே.எம்.எஸ். சிவக்குமார் என்பவர் முன் பகை காரணமாக என்னைப் பார்த்து ஒருமையிலும் அசிங்கமான வார்த்தைகளாலும் திட்டி என்னுடைய அனுமதியில்லாமல் எப்படி கிராம சபை கூட்டம் நடத்துவாய் என்று கூறி எனது சட்டையைப் பிடித்து கொண்டு, பெட்ரோல் ஊற்றி எரிங்கடா வழக்கு வந்தால் நான் பார்த்துக் கொள்கிறேன் என்று கூறி கொலை மிரட்டல் விடுத்ததாகவும் , இதனால் ராகசாரதி, அருண் ஆகிய மூன்று பேரும் இரும்பு ராடு, மற்றும் உருட்டு கட்டையுடன் எனைக் கொலை செய்ய சுற்றி வருவதாகவும், அதனால் எனக்கும், எனது குடும்ப உறுப்பினர்களுக்கும் இவர்களால் உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இவர்கள் இருவரின் புகார்களை பெற்றுக் கொண்டு அதன் மீது பாதிரிவேடு காவல்நிலைய போலீசார் விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here