ராமநாதபுரம், ஜூலை 7-
வலது கை செய்வது இடது கைக்கு தெரியக்கூடாது என முந்தைய காலத்தில் சொன்னதை இன்று பலரும் மறந்து இருந்தாலும் மண்ணின் மைந்தரான தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் டாக்டர் மணிகண்டன் மீனவ குடும்ப மாணவியின் கல்லுாரி படிப்பு செலவு முழுவதையும் ஏற்றுக்கொண்டது மீனவர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த பல ஆண்டுகளுக்கு பின் மண்ணின் மைந்தரான அதிமுகவின் மாவட்ட அவைத்தலைவர் முருகேசன் அவர்களின் மகன் டாக்டர் மணிகண்டன் மதுரை அரசு மருத்துவ கல்லுாரியில் பேராசிரியராக பணியாற்றிக்கொண்டு இருந்தார். அவரை தமிழகத்தின் தங்கதாரகை இதயதெய்வம் அம்மா அவர்கள் ராமநாதபுரம் மாவட்ட மக்களின் துயர் துடைக்க சரியான நபர் டாக்டர் மணிகண்டன் என அடையாளம் காண்பித்து சட்டமன்ற உறுப்பினராக்கி தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சராகவும் ஆக்கி மக்கள் பணியாற்று என உத்தரவிட்டார். அவரின் உத்தரவின்படி மண்ணின் மைந்தர் அமைச்சர் டாக்டர் மணிகண்டன் ஓய்வறியாமல் மக்கள் பணி செய்வதை இன்றும் தனது தங்கதாரகை சொல்லிக்கொடுத்த மந்திரமாக கடைபிடித்து வருகிறார். அதுமட்டுமின்றி கிராமம் கிராமமாக சென்று மக்கள் குறைகளை கேட்பதும் அவர்களின் தேவைகளை அறிந்து அதை உடனுக்குடன் செய்வதிலும் அவருக்கு நிகர் அவர்தான். அந்தவகையில் தற்போது  ராமேஸ்வரம் தீவு பகுதியை சேர்ந்த தங்கச்சிமடத்தில் உள்ள மீனவ குடும்பத்தில் பிறந்த ஒரு மாணவி கல்லுாரியில் சேர்வதற்கு உரிய இடம் கிடைத்தும் கல்லுாரி கட்டணம் செலுத்த வழியில்லை என படிப்பை தொடர முடியாமல் மிகவும் மனவேதனையில் இருந்தார். அவரது நிலையை கண்ட அதிமுக கட்சிக்காரர் ஒருவர், மாணவியிடம் நீ நேராக நமது அமைச்சரை சந்தித்து உனது நிலைய கூறு என எடுத்துரைத்துள்ளார். அவரது கருத்தை கேட்ட மாணவிக்கு அமைச்சர் உடனடியாக தனது சொந்த பணத்திலிருந்து கல்லுாரிக்கான முழு கட்டணத்தையும் நானே செலுத்துவிடுகிறேன் என உறுதியளித்து இந்தாண்டுக்கான கட்டணத்தை உடனடியாக மாணவியின் கையில் கொடுத்து உதவினார். இத்தகவல் மீனவர்கள் மத்தியில் பரவி தீவு பகுதி மீனவர்கள்  மண்ணின் மைந்தர் அமைச்சரை மனதார பாராட்டுகின்றனர்.  இவர் போல யார் என்று…. ஊர் சொல்ல வேண்டும்….! என்ற பாடல் வரிகள் துாரத்தில் கேட்க மாணவி ஒருவித மகிழ்ச்சியுடன் வீருநடைபோட்டு சென்றார். 

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here