பூண்டி, மார்ச். 15 –

தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மா.மருதுபாண்டி

திருவள்ளூர் மாவட்டம், பூண்டி ஒன்றியம், மாம்பாக்கம் ஊராட்சியில் குழந்தை பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரு.28 லட்சம் மதிப்பிலான புதியதாக கட்டி முடிக்கப்பட்ட ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி இரண்டு வகுப்பறைகள் திறப்பு விழா அப்பள்ளி வளாகத்தில் நடைப்பெற்றது. அதனை கும்மிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி.ஜே.கோவிந்தராஜன் திறந்து வைத்தார்.

மேலும் அப்பள்ளி வகுப்பறை கட்டட திறப்பு விழா நிகழ்ச்சிக்கு தலைமையாசிரியர் தலைமை தாங்க, பள்ளி ஆசிரியர்கள் முன்னிலையில் புதிய இரண்டு வகைப்பறைகளை சட்டமன்ற உறுப்பினர் டி.ஜே. கோவிந்தராஜன் திறந்து வைத்தார்.

மேலும் அவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக பல்வேறு கட்சிகளைச் சார்ந்த முன்னாள் மாணவர்கள் பங்கேற்றனர். மேலும் அவ்விழாவில் பூண்டி கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் டி.கே. சந்திர சேகர், வடக்கு ஒன்றிய செயலாளர் வழக்கறிஞர் ஜான் என்கிற பொன்னுசாமி மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் காண்டீபன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில அரசியல் குழு தலைவர் நீலவானத்து நிலவன் பங்கேற்று சிறப்பித்தனர்.

தொடர்ந்து அவ்விழாவில் சிறப்புரை நிகழ்த்திய முன்னாள் மாணவர் நீலவானத்து நிலவன் நீண்டதொரு தனது பள்ளி நினைவுகள் குறித்து மாணக்கர்களுடன் பகிர்ந்துக் கொண்டார்.

அச்சிறப்புமிகு விழாவில் மாம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் சாசா பிரதிப் அஷோக்குமார், ஒன்றிய கவுன்சிலர் காயத்திரி லட்சுமிகாந்த், ஊராட்சி செயலாளர் யோகானந்தம், துணைத் தலைவர் சாந்தி மற்றும் ஊராட்சி ஒன்றிய மற்றும் ஊராட்சி உள்ளாட்சி பிரதிநிதிகள் பங்கேற்று விழாவினை சிறப்பித்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here