திருப்பாலைவனம், மார்ச். 12 –
மறைந்த முன்னாள் பாரத பிரதமர் அட்டல் பிகாரி வாஜ்பாய் அவர்களின் கனவான தூய்மை இந்தியா எனும் திட்டத்தின் படி கிராமங்கள் தோறும் பாரதப் பிரதமர் மோடி அறிவுறுத்தலின் பேரில் பாஜகவினர் தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இன்று, திருவள்ளூர் மாவட்டம், திருப்பாலைவனம் கிராமத்தில் மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் பாஜகவினர் அப்பகுதியில் உள்ள குப்பைகளை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். மீஞ்சூர் வடக்கு ஒன்றியம் சார்பில் மீஞ்சூர் வடக்கு ஒன்றிய தலைவர் சந்திரமவுலி தலைமையில் திருப்பாலைவனம் அருள்மிகு ஆலயம்மன் திருக்கோயில் அருகில் பாஜக கொடிமரம் அருகே நிகழ்ச்சி துவங்கப்பட்டது.
திருப்பாலைவனம் ஊராட்சியில் தூய்மை பணியாளர்களாக பணியாற்றுபவர்களுக்கு புடவைகளும் லுங்கிகளும், இனிப்புகளும் வழங்கப்பட்டது. பின்னர் ஆலய அம்மன் கோயில் பின்புறம், குளக்கரை, பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் பாஜகவினர் தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய பொதுச் செயலாளர் சிவா, மீஞ்சூர் ஒன்றிய பொருளாளர் லயன் கலைவாணி, துணைத் தலைவர் ஜெயபால் மாவட்ட துணைத் தலைவர் பத்மநாபன், வெளிமாநில தொடர்பு மாவட்ட தலைவர் பிரகாஷ், அமைப்புசாரா பிரிவு மாவட்ட தலைவர் நெல்லை பாலன், செயலாளர் சுரேந்தர், இளைஞரணி தலைவர் சீனிவாசன், இளைஞரணி செயலாளர் விஜயலட்சுமி, திருப்பாலைவனம் கிளை தலைவர் சுசீலா, செயற்குழு உறுப்பினர் உஷா மற்றும் பாஜக நிர்வாகிகள் மோகன், குபேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.




















