N.I.A. சட்டத்தின் கீழ் இஸ்லாமிய இளைஞர்கள் மீது தவறான வழக்குகள் தொடர்ந்து, தண்டிக்கப் படுவதால், அதனை சட்டப் பூர்வமாக எதிர் கொள்வதாக இஸ்லாமிய கூட்டமைப்பு சார்பாக முடிவெடுக்கப் பட்டதையும் சட்ட பூர்வாக வென்ற பல வழக்குகள் தவறாக புனைய பட்ட வழக்கு என்பதின் நிரூபமனமான நகல் காப்பிகளையும் தி.மு.க. கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலினை நேரில் சந்திந்து இஸ்லாமிய கூட்டமைப்பு தலைவர்கள் வழங்கினர்.
சென்னை; ஜலை,26- திமுக தலைவா் முக ஸ்டாலினை மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேராசிரியர் முனைவர் M.H.ஜவாஹிருல்லா. தமுமுக பொதுச் செயலாளர் (பொறுப்பு) ஜெ.ஹாஜா கனி மற்றும் இஸ்லாமிய கூட்டமைப்பு நிர்வாகிகளும் நேற்று ( 25.07.2019 ) சந்தித்தனா்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிடம் NIA வின் ஆள் தூக்கி சட்டம் மூலம் மத்திய அரசு தமிழகத்தில் முஸ்லிம்கள் மத்தியிலே மிகப் பெரும் பதட்டத்தை உருவாக்கி கொண்டிருக்கின்ற சூழலையும் பொய்யான வழக்குகள் புனையப்பட்டு முஸ்லிம் இளைஞர்கள் ஆங்காங்கே கைது செய்யப்படுவதை கண்டித்தும் மனு அளிக்கப்பட்டது. NIA மூலம் இதுவரை நடந்த கைதுகள் 95% பொய்யானவை என நீதிமன்றம் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ள ஆவணங்களும் கொடுக்கப்பட்டது.