கும்பகோணம், பிப். 20 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்…
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம், புளியம்பேட்டை நகரில் உள்ள ஒரு வீட்டில் பட்டப்பகலில் அடையாளம் தெரியாத ஐந்து பேர் கொண்ட மர்ம நபர்கள் முகமூடி அணிந்து கொண்டு, கத்தியை காட்டி மிரட்டி 15 பவுன் நகை, வெள்ளி பொருட்கள், குத்துவிளக்கு, செல்போன், ரூ.13,500 பணம் உள்ளிட்டவைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். அதுக்குறித்து தகவலறிந்து வந்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.
திருவிடைமருதூர் தாலுகா, புளியம்பேட்டை மெயின் ரோட்டில் உள்ள புவனேஸ்வரி நகரில் வசித்து வரும் உதயச்சந்திரன், இவர் வெளிநாட்டில் ஓட்டுநராக உள்ளார். மேலும் அவருக்கு திருமணமாகி வேம்பு, என்ற மனைவியும் ஒரு மகள் ஒரு மகன் உள்ளனர்.
இந்நிலையில் நேற்று மாலை 4 மணியளவில் சொகுசு காரில், 3 முகமூடி, அணிந்தும் 2 பேர் முகமூடி, அணியாமலும் மொத்தம் 5 பேர் கொண்ட கும்பல் கத்தி, அரிவாள், உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் உள்ளே வந்து உதயசந்திரன் மனைவி வேம்புவை கட்டிப்போட்டு கழுத்தில் அணிந்திருந்த தாலி செயின், உட்பட 10 பவுன் நகை, கையில் அணிந்திருந்த மோதிரம், இதை தடுக்க வந்த வேம்புவின் கணவர் உதயசந்திரனை ஆயுதங்களால் தாக்கி அவர் அணிந்திருந்த மூன்று பவுன் ஜெயின், மோதிரம், மற்றும் வீட்டில் வைத்திருந்த ரொக்க பணம் 13, 500 வெள்ளி பொருட்கள் பெரிய குத்து விளக்கு, ஐபோன், மற்றும் செல்போனகளை பறித்து சென்றுள்ளனர்.
அத்தகவலயறிந்து அச்சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருவிடைமருதூர் காவல்துறை ஆய்வாளர் ராஜேஷ், மற்றும் காவல்துறையினர் அதுக் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் அச்சம்பவத்தில் கொள்ளையர்களால் ஆயுதங்களால் தாக்கப்பட்ட உதயச்சந்திரன் மற்றும் வேம்பு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும் பட்டபகலில் வீடு புகுந்து கொள்ளையடித்த அச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் பதட்டத்தையும் மக்களிடையே ஏற்படுத்தியள்ளது..
அதனைத் தொடர்ந்து தஞ்சையில் இருந்து மோப்ப நாய், மற்றும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப் பட்டு காவல்துறையினர் தடயங்களை சேகரித்து வருகின்றனர்.





















