கும்பகோணம், டிச. 23 –
தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அருகேவுள்ள திருவிடைமருதூர் தாலுக்காவில் அரசின் சேவைகள் பொதுமக்களை விரைவாகவும், எளிதாகவும் சென்று சேர்ந்திடும் வகையில், மக்களுடன் முதல்வர் என்ற புதிய திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கோவையில் சில தினங்களுக்கு முன்பு தொடங்கி வைத்தார்.
அதன் தொடர்ச்சியாக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் வெகுச்சிறப்பாக நடைப்பெற்று வருகிறது. அதன் பகுதியாக ஆடுதுறை பேரூராட்சி சார்பில் கோசி மணி மண்டபத்தில் பேரூராட்சி தலைவர் ம.க ஸ்டாலின், தலைமையில் அத்திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது.
அதில் பேரூராட்சி துணைத் தலைவர் கமலா சேகர், பேரூராட்சி உறுப்பினர்கள் கோசி இளங்கோவன், பாலதண்டாயுதம், பரமேஸ்வரி சரவணகுமார், செல்வராணி சிவகுமார், மீனாட்சி முனுசாமி, சுகந்தி சுப்ரமணியன், மாலதி சிவக்கொழுந்து, பூ கண்ணன், முன்னாள் துணைத் தலைவர் ஆண்டாள் சிவகுமார், திமுக மாவட்ட அவைத் தலைவர் நசீர் முகமது, செயல் அலுவலர் புனிதவதி, வட்டாட்சியர் பொறுப்பு சுசீலா, மற்றும் பேரூராட்சி உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள், உள்ளிட்ட ஏராளமானவர்கள் பங்கேற்று அவ்விழாவினை சிறப்பித்தனர்.
மேலும் அம்முகாமில் ஆடுதுறையினை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களின் கோரிக்கைகள் நிறைந்த மனுக்களை சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அலுவலர்களிடம் வழங்கி னர். அதைத் தொடர்ந்து அவ்வலுவலர்கள் துறைச்சார்ந்த இணையைப் போர்டர்களில் பதிவு செய்தனர். அக்கோரிக்கைகளின் மீதான நடவடிக்கைகளை 30 தினங்களுக்குள் மேற் கொண்டு தீர்வுக் காணப்படும் என பயனாளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. அம்முகாமில் 13 க்கும் மேற்பட்ட துறைச்சார்ந்த அலுவலர்கள் பங்கேற்று பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக் கொண்டனர்.
மேலும் இந்த முகாமில், மக்கள் அடிக்கடி அணுகுகின்ற துறைகளான, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, ஊரக வளர்ச்சித்துறை,நகராட்சி நிர்வாகத்துறை, ஆதி திராவிடர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர்- மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை, கூட்டுறவு துறை, சிறு, குறு, நடுத்தரத் தொழில்கள் துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, சமூகநலன் மற்றும் மகளிர் உரிமை துறை, எரிசக்தித் துறை, மின்சாரத்துறை, ஆகிய 13 அரசுத் துறைகள் கலந்து கொண்டனர்.
அதில் மகளிர் உரிமைத்தொகை, முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டு மனை பட்டா, உள்ளிட்ட 300க்கு மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டன.15 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது.





















