திருத்தணி வட்டார போக்குவரத்து அலுவலராக பணிப்புரிந்து வரும் ஜெயபாஸ்கரன் என்பவர் திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அவர் கொடுத்த புகாரில் தனது கட்டுப்பாட்டில் இயங்கி வரும் திருத்தணி போக்குவரத்து ஆய்வாளரின் அலுவலகத்தில் ஆய்வாளரின் யூசர் ஐடி, மற்றும் பாஸ்வேர்டுகளை தெரிந்துக்கொண்டு அவ்வாளகத்தில் இயங்கிவரும் பாண்டன் எனும் நிறுவனத்தில் பணி புரிந்து வரும் நபர் ராஜா என்கிற ராபர்ட் அதனைப் பயன் படுத்தி சட்டவிரோதமாக வாகன ஒட்டுனர் உரிமம் மற்றும் ஒட்டுனர் புதுப்பித்தல் உரிமங்களை பொய்யான முகவரிகளை பதிவு செய்து போலியான சான்றுயிதழ்களை வழங்கி சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடுபட்டார். அவர்மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வழியுறுத்தி அவர் கொடுத்த புகாரில் தெரிவித்துள்ளார்.
திருத்தணி; அக்.20-
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி வட்டார போக்குவரத்து அலுவலர் கொடுத்த புகாரின் பேரில் அடிப்படையில், வழக்கு பதிவு கு.வ.எண்; 30/2019 – ன் படி ஐந்து பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, மாவட்ட அரவிந்தன் அவர்களை கைது செய்ய உத்திரவு இட்டதின் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு காவல் துணைக் கண்காணிப்பாளர் கண்ணப்பன் தலைமையில் மாவட்ட குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் ருக்கமாங்கதன் மற்றும் போலீஸ் சகிதமாக விசாரணை நடத்தியதில் பாண்டன் நிறுவனத்தில் பணி புரிந்து வந்த ஊழியர் திருத்தணி செந்தமிழ் நகரைச் சேர்ந்த தேவசுந்தரம் என்பவரின் மகன் ராஜா என்கிற ராபர்ட் என்பவர் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டது தெரியவந்தது.
இந்நிலையில் தலை மறைவாக இருந்த ராஜா என்கிற ராபர்ட் மற்றும் அவரது கூட்டாளிகள் திருவண்ணாமலை மாவட்டம் கணேச புரம் ,தாளவேடு கீழ்அணைக்கரை அஞ்சலைச் சேர்ந்த அண்ணாமலை என்பரின் 25 வயதுடைய மகன் விஷ்ணு, மற்றும் அதை மாவட்டத்தைச் சேர்ந்த மெய்யூர் அஞ்சல், ஓடைக்கால் தெருவைச் சேர்ந்த மறைந்த முருகேசன் என்பவரின் 25 வயதுடைய மகன் சக்திவேல் ஆகிய 3 பேரையும் கடந்த அக் 18 ஆம் தேதி கைது செய்து போலீசார் திருத்தணி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.























