தஞ்சாவூர், மார்ச். 01 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு..
தஞ்சை மாநகர திமுக சார்பில், பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள பேரறிஞர் அண்ணா சிலை அருகே பொதுக்குழு உறுப்பினர் ஆறுமுகம், மத்திய மாவட்ட திமுக துணைச்செயலாளர் மணிமாறன், பகுதி கழக செயலாளர் மேத்தா, மண்டல குழு தலைவர்கள் புண்ணியமூர்த்தி, ரம்யா சரவணன், மாவட்ட வர்த்தக அணி துணை செயலாளர் ஆர்.கே.நாகராஜன், மாமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும், முதலமைச்சருக்கு வாழ்த்து முழக்கங்களை எழுப்பி உற்சாகத்துடன் கொண்டாடினர்…




















