கும்மிடிப்பூண்டி, ஏப். 10 –
கும்மிடிப்பூண்டி அடுத்த கவரப்பேட்டையில் நடைப்பெற்ற வாகன சோதனையில் 50 .கிலோ சந்தன கட்டைகளை பறிமுதல் செய்தும், கடத்தலில் ஈடுப்பட்ட மூன்று பேரை கைது செய்து போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த கவரப்பேட்டை கே .எஸ். சாலையில் இரவு பகலாக கவரப்பேட்டை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது நள்ளிரவில் வந்த கர்நாடகா பதிவு எண் கொண்ட சொகுசு காரை மடக்கி பரிசோதனை செய்தபோது சொகுசு காரில் சிறு சிறு துண்டுகளாக வெட்டப்பட்ட 96 துண்டுகள் அடங்கிய 50 கிலோ சந்தன கட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.




















