திருவள்ளூர், ஆக. 09 –

சர்வதேச பழங்குடியினர் தினத்தை முன்னிட்டு இன்று  அதன் மாநிலத் தலைவர் வழக்கறிஞர் கி.சரவணன்  அவ்வியின மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி ஒன்றியம், புதுகும்மிடிப்பூண்டி ஊராட்சியில் உள்ள புதுப்பேட்டை எஸ்.டி காலணியில் பழங்குடி மக்கள் இயக்க மாநிலத் தலைவர் வழக்கறிஞர் கி.சரவணன் தலைமையில் சர்வதேச பழங்குடியினர் தின கொண்டாட்ட நிகழ்வு நடைபெற்றது.

இந்நிகழ்வில் புதுகும்மிடிப்பூண்டி முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் தொழிலாளர் கணபதி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார், மேலும், மனோகர், ஆசிரியர் இரா.ஏழுமலை, சந்திரன், முனிகிருஷ்ணன், செ.மாரியம்மாள், சந்திரன், தங்கவேல் ஆகிய பழங்குடி மக்கள் இயக்க நிர்வாகிகள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர். தொடர்ந்து நிகழ்வில் பங்கேற்ற பெருந்திரளான பழங்குடி இன மக்களுக்கு நலத்திட்ட உதவிகளும் அன்னதானமும் வழங்கப்பட்டது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here