ராமநாதபுரம், அக். 20-
ராமநாதபுரம் மாவட்டத்தில் முதன்முறையாக வேலம்மாள் மருத்துவ கல்லுாரி மருத்துவமனை இலவச பல்நோக்கு மருத்துவ முகாம் நடத்தினர். இம்முகாமில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் இலவச சிகிச்சை பெற்று சென்றனர்.
மதுரை வேலம்மாள் மருத்துவ கல்லுாரி மருத்துவமனை சார்பில் தென் தமிழகத்தில் உள்ள 9 மாவட்டங்களிலும் தாலுகா வாரியாக மக்களை நோக்கி மருத்துவமனையே செல்லும் திட்டமான இலவச பல்நோக்கு மருத்துவ முகாம் நடத்தி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் நடத்தப்பட்ட பல்நோக்கு மருத்துவ முகாமில் ராமநாதபுரம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வந்து இலவசமாக மருத்துவ பரிசோதன செய்து இலவச மருந்து மாத்திரைகள் பெற்று சென்றனர்.
பல்நோக்கு மருத்துவ முகாமை துவக்கி வைத்த வேலம்மாள் மருத்துவ கல்லுாரி மருத்துவமனை முதன்மை செயல் அலுவலர் வெங்கட் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
வேலம்மாள் கல்வி அறக் கட்டளையின் சேர்மன் முத்துராமலிங்கம் ஆலோசனையின் படி மக்கள் இருக்கும் இடத்திற்கே மருத்துவ மனையை கொண்டு சென்று அனைத்து விதமான மருத்துவ பரிசோதனைகளையும் இலவசமாக மேற் கொண்டு நல்ல சிகிச்சை வழங்க வேண்டும் என தெரிவித்தார். அதன் படி முதன் முறையாக அருப்புக் கோட்டையில் பல் நோக்கு மருத்துவ முகாம் நடத்தினோம். அதனை தொடர்ந்து இரண்டாவது இடமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் பல் நோக்கு மருத்துவ முகாம் நடத்தினோம். இம் முகாமின் சிறப்பு என்ன வென்றால் முகாமில் எக்ஸ்ரே, இசிஜி, அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன், எக்கோ, ரத்த பரிசோதனை, போன்ற பரிசோதனை களை இலவசமாக மேற் கொள்ளப் படும். இம் முகாமில் 100க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பங்கேற்றுள்ளனர். 18 துறைகளை சார்ந்த 32 சிறப்பு மருத்துவ டாக்டர்கள் சிகிச்சை அளிக்கின்றனர். எங்கள் சேர்மனின் நோக்கம் மக்களுக்கு தரமான மருத்துவம், குறைந்த செலவில் சிகிச்சை, கணிவான கவனிப்பு வழங்க வேண்டும் என்பதே. அதைத் தான் வேலம்மாள் மருத்துவ மனையில் பின் பற்றுகிறோம். தற்போது தென்த மிழகத்தில் 2 ஆயிரத்து 100 படுக்கை வசதிகளுடன், 200 தீவிர சிகிச்சை பிரிவு படுக்கை வசதியுடன் ஒரு நாளைக்கு 2 ஆயிரம் புற நோயாளிகளும், 700 உள் நோயாளிகளுக்கும் சிறந்த முறையில் சிகிச்சை வழங்கும் நம்பர் 1 மருத்துவ மனையாக திகழ்கிறது. இது போன்ற முகாம் தொடர்ந்து நடத்த திட்டமிட்டுள்ளோம், என்றார்.