ஆவடி; அக்.20-
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அடுத்த திருமுல்லைவாயில் பகுதியில் தனியார் மண்டபத்தில் ஒன்பதாம் ஆண்டு மலையாளிகள் சங்கம் சார்பாக ஓணம் பண்டிகை கொண்டாடப் பட்டது இந்த விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக மெடிமிக்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் டாக்டர் ஏ.வி. அணூப் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு குத்து விளக்கேற்றி விழாவினை துவக்கி வைத்தார்.
இவ்விழாவில் கேரளத்து நாட்டு பாரம்பரியமான கோலங்கள் வரையப் பட்டிருந்தன மற்றும் பாரம்பரிய உடையணிந்து திருவாதிரை நடனமாடி அவர்கள் பாரம்பரியத்தை வெளிக்காட்டினர் பின்னர் மோகினி ஆட்டம் பரதநாட்டியம் நாட்டுப்புற பாடல் நாடகம் போன்ற கலை நிகழ்ச்சிகளும் நிகழ்த்தினர். இந்நிகழ்ச்சியில் பத்தாம் வகுப்பு பன்னிரண்டாம் வகுப்பில் அப்பகுதியில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கு கோப்பைகளும் ரொக்கப் பரிசுகளும் சிறப்பு விருந்தினர் டாக்டர் ஏ.வி. அணூப் வழங்கினார். மற்றும் மலையாளி சங்க திருவள்ளூர் மாவட்ட தலைவர் ஹைடெக் மனோகரன் திருமுல்லைவாயில் பகுதி தலைவர்கள் கேபி கருணாகரன் சங்கரநாராயணன் கோபிநாதன் பொதுச் செயலாளர் விஜயன் பொருளாளர் ரகுநாதன் மற்றும் அப்பகுதி சுற்று வட்டார கேரளத்து மலையாளி சங்க உறுப்பினர்களும் குடும்பத்துடன் இந் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி முடிவில் கேரளத்து பாரம்பரிய உணவு வகைகளும் விருந்தளிக்கப் பட்டது
ஆவடி ராஜன் செய்தியாளர்