ஊத்துக்கோட்டை, ஏப். 27 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மா.மருதுபாண்டி
திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டையில் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் 3 ஆம் ஆண்டு கிரிக்கெட் போட்டி வெகுச் சிறப்பாக இன்று நடைபெற்றது.
மேலும் அந்நிகழ்ச்சியில் திரைபட பாடகர் கான பாலா மற்றும் மாவட்ட உரிமையில் மற்றும் குற்றவியல் நீதிமன்றம் ஊத்துக்கோட்டை நீதிபதி செந்தமிழ்செல்வன் கலந்து கொண்டு கிரிக்கெட் போட்டியினை துவக்கி வைத்தனர்.
இந்நிகழ்ச்சிக்கு ஊத்துக்கோட்டை வழக்கறிஞர் சங்க தலைவர் வழக்கறிஞர் வேல்முருகன் தலைமை தாங்கினார். சங்க செயலாளர் கவிபாரதி பொருளாளர் நரசிம்மன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மிகுந்த பரபரப்புடன் நடைப்பெற்ற கிரிக்கெட் போட்டியில் ஊத்துக்கோட்டை, பெரியாளையம், பொன்னேரி, திருவள்ளூர் மற்றும் மாவட்டத்தின் பல்வேறுப் பகுதிகளில் இருந்து கிரிக்கெட் போட்டியில் வழிக்கறிஞர்களின் 20 க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டு கிரிக்கெட் விளையாடினர்.




















