தமிழ்நாடு கொரோனா தொற்று இல்லாத முதன்மை மாநிலமாக விளங்குவதற்கு 100 சதவீதம் கொரோனா தடுப்பூசிகளை அனைவருக்கும் செலுத்த வேண்டும் என்ற இலக்கை தமிழக முதலமைச்சர் நிர்ணயம் செய்து அதை அனைத்து மாவட்ட நிர்வாகமும் இதனை நடைமுறைப் படுத்த வேண்டும் என்ற அறிவுறுத்தலின் படி தற்போது அனைத்து மாவட்டங்களிலும் 3 வது வார தொடர் தடுப்பூசி முகாம்களை செயல்படுத்தி முதல்வரின் 100 சதவீத இலக்கை நோக்கி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.  

அதேப் போல் இன்று திருவிடை மருதூரில் நடைப்பெற்ற 3 வது வார தொடர் கோவிட் 19 தடுப்பூசி முகாம் நடைப்பெற்றது. அம்முகாமினை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

திருவிடைமருதூர், செப். 26 –

கும்பகோணம் அடுத்த திருவிடைமருதூரில் ஆய்வு நடத்திய அமைச்சர் கொரானா வைரஸ் பரவலின் மூன்றாவது அலை வரக்கூடாது என்றும் அவ்வாறு வந்தால் அதனை சமாளிக்கும் ஆற்றல் தமிழக அரசிடம் உள்ளது என்றும், தேவையான தடுப்பூசிகள் , படுக்கை வசதிகள்,  ஆக்சிஜன் வசதிகள் அனைத்தும் நம்மிடம் இருப்பதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் இன்று மதியம் கும்பகோணம் அருகே திருவிடைமருதூரில் செய்தியாளர்களிடம் பேசும்போது தெரிவித்தார்.

மேலும் செய்தியாளர்களிடம் பேசிய மா.சுப்பிரமணியன், கொரானா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தமிழகத்தில் இன்று தொடர்ச்சியாக 3வது ஞாயிற்றுக் கிழமையாக தடுப்பூசி முகாம்கள் நடைபெற்று வருகிறது.

தமிழகம் முழுவதும் இன்று 20 ஆயிரம் தடுப்பூசி முகாம்கள் மூலம் 15 லட்சம் நபர்களுக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இன்று மதியம் 2 மணி நிலவரப்படி 16 லட்சத்து 50 ஆயிரம் நபர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு விட்டது .

இன்று மாலைக்குள் 20 லட்சம் நபர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு விடும் என்றும், இதன் மூலம் தமிழகத்தில் 60 சதவீத மக்கள் தடுப்பூசி போட்டு போட்டுக் கொண்ட நிலை ஏற்படும் என்றும் மா சுப்பிரமணியன் தெரிவித்தார்.

தமிழகத்தில்   கொரோனா வைரஸ் பரவலின் மூன்றாவது அலை வரக்கூடாது என்றும், வந்தால் அதனை சமாளிக்கும் ஆற்றல் தமிழக அரசிடம் உள்ளது என்றும் தேவையான தடுப்பூசிகள் ,படுக்கை வசதிகள் ,ஆக்சிஜன் வசதிகள். உட்பட அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளது என்று  சுப்பிரமணியன்  தெரிவித்தார்.

தமிழக முதல்வர் எடுத்த தீவிர முயற்சியால் தற்போது தமிழகத்தில்  தற்போது 28 லட்சம் கொரானா தடுப்பூசிகள் இருப்பு உள்ளது என்றும் இதனை அடிப்படையாகக் கொண்டே தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருவதாகவும், தடுப்பூசி போடும் முகாம்கள்  திருவிழாக்களை போல் நடைபெறுவதாகவும் சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்தார்.

தஞ்சாவூரில் முதுகு தண்டுவட தசைநார் பாதிக்கப் பட்டுள்ள குழந்தைக்கு சிகிச்சை அளிப்பது தொடர்பாக பாதிக்கப்பட்ட குழந்தையின் பெற்றோர்களை அழைத்து பேசி இருப்பதாகவும், குழந்தையை அழைத்துக்கொண்டு சென்னைக்கு வரச்சொல்லி இருப்பதாகவும் ,அங்கு குழந்தைக்கு தேவையான ஆய்வுகள் நடத்தி உரிய சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சுகாதார துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்தார் .

திருவிடைமருதூரில் நடைபெற்ற மருத்துவ முகாம் நிகழ்ச்சியில் அரசு கொறடா கோவி. செழியன் ,தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  திருவிடைமருதூர் நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு சுகாதாரத்துறை அமைச்சர் மயிலாடுதுறைக்கு புறப்பட்டுச் சென்றார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here