மீஞ்சூர், பிப். 07 –

தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி….

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த திருவெள்ளவாயல் அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை சார்பில் 2023-24ம் ஆண்டிற்கான மாணவ மாணவிகளுக்கு விலையில்லா  மிதிவண்டி வழங்கும் விழா தலைமை ஆசிரியர் புஷ்பலதா  தலைமையில் நடை பெற்றது.

இதில் சிறப்பு அழைப்பாளராக  பொன்னேரி எம்எல்ஏ துரை சுந்தரசேகர் கலந்து கொண்டு 104 மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை  வழங்கி  சிறப்புரை நிகழ்த்தினார். அப்போது பேசிய எம்எல்ஏ துரை சந்திரசேகர் தமிழக முதல்வர் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு சிறப்பான பல்வேறு திட்டங்களை வகுத்து, மாணாக்கர்களின் கல்வி மேம்பட  அனைத்து திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறார் எனவும், இருப்பினும் மாணவர்கள் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் பள்ளிக்கு குறைவாக வருவதாகவும் மாணவர்கள் செய்த தவறுக்கு ஆசிரியரிடம் மன்னிப்பு கேட்பதும், அவர்களுக்கு நன்றி சொல்வதும் தற்போது மாணவர்களிடம் குறைவாக காணப்படுவதாக சர்வதேச சர்வே தெரிவித்துள்ளதாக அப்போது அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து உரை நிகழ்த்திய துரை சந்திர சேகர் மாணவர்கள் பெற்றோர்கள் ஆசிரியர்களுக்கு கீழ்படிந்து நடக்க வேண்டும் எனவும் மேலும் சிறப்பான எதிர்காலத்தை உருவாக்க வேண்டும் எனவும் அதுப்போன்று நல்முறையில் கல்விப் பயின்று உயர் நிலை பதவிகளுக்கு வரவேண்டும் என அப்போது மாணாக்கர்களிடம் கேட்டுக் கொண்டார்.

மிகச் சிறப்பாக நடைப்பெற்ற அந்நிகழ்வில் மீஞ்சூர் பெருந்தலைவர் ரவி  திமுக மீஞ்சூர் கிழக்கு   ஒன்றிய செயலாளர் ஜெகதீஷன்  வாயலூர் ஊராட்சி மன்ற தலைவர் கோபி, தலைமை ஆசிரியர் உதயகுமார்  உதவி தலைமை ஆசிரியர் தட்சிணாமூர்த்தி, பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் துலுக்காணம் மீஞ்சூர் காங்கிரஸ் வட்டாரத் தலைவர் அத்தி பட்டு புருஷோத்தமன், மற்றும் ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here