கும்பகோணம், பிப். 16 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் ..
திமுக அளித்த தேர்தல் வாக்குறுதிப்படி, ஆட்சி அமைந்த நூறு நாட்களில், கும்பகோணத்தை தலைமையிடமாக கொண்ட புதிய வருவாய் மாவட்டம் அமைப்போம் என்ற தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்தின் போது உறுதிமொழி அளித்தார்.
ஆனால் தற்போது ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு ஆட்சி அமைத்து 3 ஆண்டுகள் கடந்த பின்பும் இதுவரை கும்பகோணத்தை மாவட்டமாக அமைத்திடாத நிலையில், அவருக்கு நினைவூட்டும் வகையில், வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் நீதிமன்ற புறக்கணிப்பு செய்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகர் மற்றும் அதன் சுற்று வட்டாரப்பகுதிகளில், தற்போதைய தமிழக முதல்வர் மு க ஸ்டாலின், தனது தேர்தல் பிரச்சார சுற்றுபயணத்தில், ஒரத்தநாடு மற்றும் திருக்கடையூர் பகுதியில் நடைபெற்ற கூட்டங்களில், கழக ஆட்சி அமைத்த பிறகு, நூறு நாட்களில் கும்பகோணத்தை தலைமையிடமாக கொண்ட புதிய மாவட்டம் உருவாக்குவோம் என்றவாறு தேர்தல் வாக்குறுதியளித்தார். ஆனால் தற்போது ஆட்சி அமைத்து 3 ஆண்டுகள் கடந்த பிறகும் அதனை கண்டுகொள்ளவில்லை எனவே அவருக்கு நினைவூட்டும் வகையில், வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் நீதிமன்றம் புறக்கணிப்பு செய்து நீதிமன்ற வளாகம் முன்பு வழக்கறிஞர் சங்கத் தலைவர் விவேகானந்தன், தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுவதாக அவர்கள் தெரிவித்தனர்.
மேலும் அவ் ஆர்ப்பாட்டத்தில் செயலாளர் செல்வம், பொருளாளர் ராஜா சீனிவாசன், நூலக பொறுப்பு சசிகலா, ராசாத்தி, மூத்த வழக்கறிஞர் கலியபெருமாள், முன்னாள் சங்கத் தலைவர்கள் ராஜசேகர், சங்கர், முன்னாள் செயலாளர்கள் பாலமுருகன், இளங்கோவன், அதிமுக வழக்கறிஞர் அணி மாவட்ட தலைவர் பாலமுருகன், மாவட்ட செயலாளர் மோகன்ராஜ், வழக்கறிஞர்கள் கர்ணன், கார்த்திக், கென்னடி கண்ணன், குமார், மற்றும் நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு தொடர்ந்து கண்டன முழக்கங்களை எழுப்பினார்கள்.





















