காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே ஆனைப்பள்ளம் பகுதியில் உள்ள அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மேற்கூரை இடிந்து விபத்துக்குள்ளானது.
காஞ்சிபுரம், செப். 26 –
கொரோனா ஊரடங்கு காலம் என்பதால் தமிழகத்தில் உள்ள அனைத்து தனியார் மற்றும் அரசு பள்ளிகள் விடுமுறையில் இருப்பதால் மாணவர்கள் யாரும் பள்ளிக்கு வரவில்லை மேலும் இன்று ஞாயிற்றுக்கிழமை மூன்றாவது வாரம் மெகா கொரோனா தடுப்பூசி முகாம் இப்பள்ளியின் வளாகத்தில் நடைபெற்று வருகின்றது.
இந்த முகாமில் காலையில் இருந்து 150-க்கும் மேற்பட்டோர் தடுப்பூசி செலுத்திக் கொண்டு சென்றுள்ளனர். மேலும் பலர் தடுப்பூசி போட வந்துள்ள பொதுமக்கள் கட்டிடத்தின் வெளிப்பகுதியில் இந்த முகாம் நடந்ததால் அதிஷ்டவசமாக தப்பினர்.
கடந்த 65 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதாக கூறப்படும் இப் பள்ளி கட்டிடம் சில தினங்களாக பெய்த மழையால் இன்று பள்ளியின் மேற்கூரை இடிந்து விபத்துக்குளாகியுள்ளது. பள்ளி திறப்பதற்க்குள் இந்த கட்டிடத்தை முழுமையாக புதுபிக்க வேண்டும் என மாணவர்களின் பெற்றோர் கோரிக்கை வைத்துள்ளனர்.