கும்மிடிப்பூண்டி, ஜூலை. 30 –
கும்மிடிப்பூண்டியில் இன்று பாங்க் ஆஃப் பரோடா ஏழு கிளைகளின் சார்பில் 1200 மகளிருக்கு, சுமார் ரூ.8 கோடியே 43 இலட்சத்து 26 ஆயிரம் வழங்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது.
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியில் பேங்க் ஆப் பரோடா சார்பில் 1200 மகளிருக்கு 8 கோடியே 43லட்சத்து 26ஆயிரம் ரூபாய் சுய தொழிலுக்கான கடனுதவி வழங்கும் நிகழ்வு அப்பகுதியில் நடைபெற்றது.
இதில் பாங்க் ஆஃப் பரோடா வங்கியின், கும்மிடிப்பூண்டி, ஆவடி, கோவில்பதாகை, திருவள்ளூர், மாதவரம், என்.எம்.ரோடு ஆவடி, பெரியப்பாளையம் உள்ளிட்ட 7 கிளைகளில் கணக்கு வைத்துள்ள சுமார் 93 மகளிர் குழுக்களைச் சேர்ந்த 1200 க்கும் மேற்பட்ட மகளிருக்கு அவ் வங்கியின் சார்பில், 8 கோடியே 43 லட்சத்து 26 ஆயிரம் ரூபாய் சுயதொழில் கடனுதவி வழங்கும் விழா கும்மிடிப்பூண்டி பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில், பாங்க் ஆஃப் பரோடா வங்கி கிளை மேலாளர் ஸ்ரீகாந்த், சென்னை சமூக சேவை மையத்தை சேர்ந்த ஏசுராஜ், ஸ்ரீ கலைமகள் வித்யாலயா பள்ளி நிறுவன தலைவர் டாக்டர் திருஞானம், காரிடஸ் இந்தியா அமைப்பின் மாநில அலுவலர் டாக்டர் ஜான் ஆரோக்கியராஜ், சென்னை சமூக சேவை சங்க ஒருங்கிணைப்பாளர் அருட்சகோதரி அருள்செல்வி மற்றும் சிறப்பு அழைப்பாளராக பாங்க் ஆப் பரோடா பொது மேலாளர் சரவண குமார், மண்டல மேலாளர் லீனா, சென்னை சமூக சேவை சங்கத்தின் இயக்குனர் பாதிரியார் எம்.வி.ஜேக்கப் ஆகியோர் பங்கேற்று தொழில் கடனுதவிக்கான காசோலைகளை வழங்கினார்கள்.
மேலும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட மகளிர் மற்றும் அப்பகுதி பொது மக்கள் என திரளானவர்கள் இந்நிகழ்வில் பங்கேற்று பயனடைந்தனர்.




















