திருவேற்காடு, செப் . 26 –
தமிழ்நாடு கொரோனா தொற்றில்லா முதன்மை மாநிலமாக விளங்க வேண்டும் என்ற முதலமைச்சரின் அறிவுறுத்தலின் படி 100 சதவீதம் என்ற இலக்கை நிர்ணயம் செய்யப்பட்டு, தமிழகம் முழுவதும் இன்று 20 ஆயிரம் தடுப்பூசி முகாம்கள் மூலம் 15 லட்சம் நபர்களுக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயம் செய்யப் பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும் 3 வது தொடர் ஞாயிற்று கிழமைகளில் தடுப்பூசி முகாம் அமைக்கப்பட்டு முதல்வர் அறிவுறுத்திய இலக்கை நோக்கி அனைத்து மாவட்ட நிர்வாகங்களும் போர்கால அடிப்படையில் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இதனத் தொடர்ந்து திருவள்ளூர் மாவட்டம் வில்லிவாக்கம் ஒன்றியத்திற்கு உட்பட்ட திருவேற்காடு நகராட்சியின் ஒன்று முதல் 18 வார்டுகளில் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை பொதுமக்களுக்கு மாபெரும் கொரோனே தடுப்பூசி செலுத்தும் முகாமினை நடத்தியது. இதில் இப்பகுதி மக்களுக்கு 93 சதவிகிதம் தடுப்பு ஊசி செலுத்தப் பட்டுள்ள நிலையில் இன்று அதன் தொடர் இலக்கை பூர்த்தி செய்யும் வண்ணம் இன்று 3 வது தொடர் ஞாயிற்றுக் கிழமை மெகா கொரோனா தடுப்பூசி முகம் நடைப்பெற்றது. 100% இலக்கை நோக்கி செல்லும் தடுப்பூசி மையங்களை நகராட்சி இணை இயக்குனர் உமா மகேஸ்வரி பார்வையிட்டு ஆலோசனைகள் வழங்கினார். உடன் ஆணையர் வசந்தி, சுகாதார ஆய்வாளர் ஆல்பர்ட் அருள்ராஜ் இருந்தனர். தடுப்பூசி செலுத்திய அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.