Pic File Copy :
திருவண்ணாமலை, செப். 17 –
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு மின் கம்பி திருட்டு போய் உள்ளது. அதைத் திருடிய பலே ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
வந்தவாசி அடுத்த விழுதுப்பட்டு கிராமத்தில் உள்ள விவசாயி முருகன் என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்திற்கு செல்லும் மின் கம்பி ஒயர்களை சுமார் ஒரு கிலோ மீட்டருக்கும் அதிகமான தூரத்திற்கு அறுத்து அடையாளம் தெரியாத திருடர்கள் திருடி சென்றுள்ளனர்.
அதனை நேற்று முன்தினம் சென்று பார்த்த விவசாய அதிர்ச்சி அடைந்ததார். உடனடியாக சென்னவாரம் துணை மின்நிலையத்தில் உள்ள அலுவலர்களுக்கு தகவல் தெரிவித்ததை தொடர்ந்து மின் துறையினர். அங்கு வந்து பார்த்தனர்.
ரூ.50 ஆயிரத்திற்கும் அதிகமான மதிப்பில் திருடுபோன மின் கம்பி குறித்து கீழ்கொடுங்காலூர் போலீசில் வடக்கு துணை மின்நிலைய இளநிலை பொறியாளர் விஜயகுமார் புகார் செய்தார். அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜீலு வழக்கு பதிவு செய்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் மின் ஒயர்களை திருடிய பலே ஆசாமிகளை வலை வீசி தேடி வருகின்றனர்.