கும்பகோணம், மே. 02 –

தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் ..

கும்பகோணம் அருகேவுள்ள சிவபுரம் பகுதியைச் சேர்ந்தவர் மகேந்திரன் (48)  மேலும் அவர் கும்பகோணம் பாலக்கரை பகுதியில் தரைக் கடை அமைத்து மாங்கா வியாபாரம் செய்து வருகிறார்.

இந்நிலையில் சம்பவ நாளானயின்று கொளுத்தும் வெயிலில் மாங்காய் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த அவர் சிறிது நேரத்திற்கு முன்பு திடீரென சுருண்டு கீழே மயங்கி விழுந்துள்ளார்.

உடனடியாக அவரை அங்கிருந்த வியாபாரிகள் மீட்டு  அரசு மருத்துவமனை கொண்டு சென்ற நிலையில் அவர் ஏற்கனேவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் அத்தகவலறிந்து அங்கு வந்த காவல்துறையினர் அவரின் திடீர் மரணம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோடை வெயில் தாக்கத்தின் காரணமாக அவர் உயிரிழந்தாரா அல்லது அவருக்கு உடலில் வேறு ஏதேனும் பிரச்சினைகள் உள்ளதா என பிரேத பரிசோதனைக்கு பிறகே தெரியவரும் என மருத்துவர்கள் மற்றும் காவல்துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here