கும்பகோணம், செப். 05 –
கும்பகோணம் கும்பேஸ்வரன் கோவில் திருமஞ்சனம் வீதியில் உள்ள, மாமரத்து விநாயகர் ஆலயத்தில் மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.
கும்பகோணத்தில் கும்பேஸ்வரன் கோவில் திருமஞ்சனம் வீதியில் பள்ளியில் உள்ள, மாமரத்து விநாயகர் ஆலயத்தின் திருப்பணிகள் நிறைவு பெற்றதை தொடர்ந்து நேற்று முன்தினம் காவிரி ஆற்றிலிருந்து புனிதநீர் நிரப்பிய கடங்கள் நாதஸ்வர மேள தாள மங்கல வாத்தியங்கள் முழங்க, யாக சாலை பிரவேசமும், அதன் பிறகு, ஹோமத்திற்காண பல்வேறு நறுமண மூலிகை பொருட்கள் மங்கள வாத்தியங்கள் முழங்க யாகசாலைக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஒலிக்க, முதல் கால யாக பூஜைகள் தொடங்கியது.
தொடர்ந்து நேற்று காலை 4ம் கால யாகசாலை பூஜைகள் நிறைவு பெற்று மகா பூர்ணாஹதியுடன் மங்கள ஆர்த்தி செய்யப்பட்டு கடங்கள் புறப்பாடும் அதனையடுத்து மூலவர் விமானம் கலசத்திற்கு சிவாச்சாரியார்கள் புனித நீரை ஊற்ற மகா கும்பாபிஷேகமும் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து இரவு சுவாமி வீதி உலாவும் நடைபெறுகிறது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை முத்து விஜயன் குடும்பத்தினர் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.