திருவாரூர், மார்ச். 01 –
தமிழ்நாடு முதலமைச்சரின் 70 வது பிறந்த நாள் விழாவை, பட்டாசு வெடித்தும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் திருவாரூர் நகர திமுக கட்சியைச் சேர்ந்த தொண்டர்கள், பழைய பேருந்து நிலையம் அருகே வெகு விமர்சியாக கொண்டாடி மகிழ்ந்தனர்.
திமுக கட்சித்தலைவரும், தமிழக முதல்வருமான மு க ஸ்டாலினின் 70 வது பிறந்தநாள் விழா இன்று திமழ்நாடு முழுவதும் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நிலையில் அதன் ஒருப் பகுதியாக, திருவாரூர் பழைய பேருந்து நிலையம் அருகே அவரது 70 வது பிறந்த நாளை முன்னிட்டு 19வது வார்டு திமுக செயலாளர் சங்கர் உள்ளிட்ட ஏராளமான திமுகவினர் பட்டாசுகள் வெடித்தும் பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
























