திருவண்ணாமலை, செப்.7-
திருவண்ணாமலை ஒன்றியம் நரியாப்பட்டு ஊராட்சி நடுநிலைப் பள்ளியில் தமிழக அரசின் கோவிட்19 வழிகாட்டு நெறிமுறைகளின்படி பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் ராணி தலைமையில் தூய்மை நிகழ்வுகள் என்ற தலைப்பில் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் வெ.சரவணன் முன்னிலை வகித்தார். அதனைத் தொடர்ந்து தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர் முன்னிலையில் ஒவ்வொரு மாணவ மாணவிகளின் வீட்டுக்கும் நேரில் சென்று கொரோனா பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதே போன்று கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து மாணவர்களுக்கு ஓவியப்போட்டி நடத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் ஆனந்த்குமார், சாந்தி, மற்றும் பெற்றோர்கள் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பள்ளி தலைமை ஆசிரியர் வெ.சரவணன் செய்திருந்தார்.