திருத்துறைப்பூண்டி, மார்ச் . 14 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் கு.அம்பிகாபதி
திருவாரூர் மாவட்டம், குடவாசல் தாலுக்கா வேம்பனூர் – மஞ்சக்குடியில் ராய் டிரஸ்ட் இன்டர்நேஷனல் நடத்திய மாபெரும் இலவச பொது மற்றும் கண் மருத்துவ முகாம் வேம்பனூர் ஐயனார் கோவில் மண்டபத்தில் இனிதே தொடங்கியது.
சுவாமி தயானந்த கல்லூரியின் ஆங்கில பேராசிரியர் மற்றும் ராய் டிரஸ்ட் இன்டர்நேஷனல் இரத்த தான மாநில ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஏழுமலை வரவேற்புரையாற்றினார். முகாமை மஞ்சக்குடி ஊராட்சி மன்ற தலைவர் வனிதா கண்ணதாசன் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
முகாமிற்கு ராய் டிரஸ்ட் நிறுவனத் தலைவர் முனைவர் துரை ராயப்பன் தலைமை தாங்கினார். சிவா இன்ஸ்டியூட் நிறுவனர் பாலசுந்தரம், உழவன் மருத்துவ காப்பீட்டு நிறுவனத் தலைவர் செல்வ கணபதி, ராய் டிரஸ்ட் கண் தான மாநில ஒருங்கிணைப்பாளர் சிவசங்கர், திருவாரூர் மெடிக்கல் சென்டரின் மருத்துவர் ஆகாஷ், அகர்வால் கண் மருத்துவமனையை சேர்ந்த மாயக்கண்ணன், முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ராய் டிரஸ்ட் மருத்துவ குழுவை சேர்ந்த மரு. அகிலா, வித்யா, பரணி, அகர்வால் மருத்துவ குழு, டி எம் சி மருத்துவ குழு என்று 30 பேர் கொண்ட மருத்துவ அணியினர் கலந்து கொண்டு சிகிச்சை அளித்தனர்.
இந்த பொது மருத்துவ முகாமில் 214 பேர் கலந்துக் கொண்டு பயனடைந்தனர். சுவாமி தயானந்த கலை & அறிவியல் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் பேராசிரியர் மகாலெட்சுமி, துர்க்கா தேவி மற்றும் நாட்டு நலப்பணித்திட்ட மாணவ மாணவிகள் 150 பேர் கலந்துக் கொண்டு நாட்டு நலப்பணித்திட்ட முகாமை சிறப்புற நடத்தினர். இறுதியாக மஞ்சக்குடி தயானந்த கல்லூரி நாட்டு நலப் பணி ஒருங்கிணைப்பாளர் பாலாஜி அனைவருக்கும் நன்றிக் கூற முகாம் இனிதே நிறைவு பெற்றது.




















