திருவண்ணாமலை, ஆக.4-
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது மத்திய அரசின் ஆணையின்படி மாநில அரசுகள் தொழில் வணிக எண் இயக்குநர்களை தமது கடடுப்பாட்டில் உள்ள மாவட்ட பகுதிகளில் மின்சாதன பொருட்களுக்கான தரக்கட்டுப்பாடு செயலாக்க அலுவலர்களாக நியமித்துள்ளது.
இவ்வாணையின்படி சலவை இயந்திரம், உணவக அரவை இயந்திரம் முகசவர கருவி முதலிய இதர வீட்டு உபயோக மின்சாதன பொருட்கள் உற்பததியாளர்கள் விற்பனையாளர்கள் ஆகியோர் தமது மாவட்டத்தில் உள்ள மாவட்ட தொழில் மையங்களில் பதிவு செய்ய வேண்டும்
இந்திய தர நிர்ணய நிறுவனத்தில் பதிவு செய்யப்பட்ட பொருட்களை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் தரம் குறைவான மற்றும் இந்திய தர நிர்ணயச்சான்று பெறாத பொருட்கள் விற்பனைக்கு தடை செய்யப்படுகிறது.
எண்ணை அழுத்த அடுப்பு உற்பத்தியாளர்கள் விற்பனையாளர்கள் ஆகியோர் தரம் குறைவான மற்றும் இந்திய தர நிர்ணய சான்றுபெறாத பொருட்கள் விற்பனை தடை செய்யப்படுகிறது.
மின்கம்பி, மின்கம்பி வடம், மின்பாதுகாப்பு சாதனங்கள் உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் ஆகியோர் தரம் குறைவான மற்றும் இந்திய தர நிர்ணயச் சான்ற பெறாத பொருட்கள் விற்பனைக்கு தடை செய்யப்படுகிறது.
மேற்படி ஆணையினை செயலாக்க செய்ய உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர் நிறுவன பதிவு திடீர் ஆய்வு தரம் குறைவான மற்றும் இந்திய தர நிர்ணயச் சான்று பெறாத பொருட்கள் விற்பனை செய்யும் நிறுவனங்கள் மீது நீதிமன்ற நடவடிக்கைகள் பொது மேலாளர் மாவட்ட தொழில் மையங்கள் மூலம் மேற்கொள்ளப்படும்.
மேலும் கூடுதல் விவரங்களுக்கு பொது மேலாளர் மாவட்ட தொழில் மையம் திருவண்ணாமலை அலுவலகத்தை நேரிலோ அல்லது தொலைபேசி எண் 04175 290038 மூலமாக தொடர்பு கொண்டு பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.