திருவாரூர், ஏப். 02 –

தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ் ..

திருவாரூர் தெற்கு வீதியில் அதிமுக சார்பில் நாகை அதிமுக வேட்பாளரை ஆதரித்து அவருக்கு வாக்கு சேகரிப்பு பொதுக்கூட்டம் நடைப்பெற்றது. அக்கூட்டத்தில் பங்கேற்ற அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிச்சாமி பேசும் போது மூன்றாண்டுகளாக தெருத் தெருவாக செங்கலை தூக்கி கொண்டு சுற்றும் உதயநிதி அவர்களின் எம்.பிக்கள் 38 பேரையும் பாராளு மன்றத்திற்குள் செங்கலை தூக்கிச் செல்லும் படி கட்டளையிட்டு இருந்தால் இந்நேரம் தமிழ் நாட்டிற்கு எய்ம்ஸ் மருத்துவமனை வந்திருக்கும் எனவும், மேலும் 23 ஆம் புலிக்கேசி போல் மத்திய அரசுக்கு வெள்ளைக் கொடி காட்டும் பொம்மை முதல்வர்தான் ஸ்டாலின் என மிக கடுமையாக தாக்கிப் பேசினார்.

திருவாரூர் தெற்கு வீதியில் நடைபெற்ற  பொதுக் கூட்டத்தில் நாகை நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் சுர்ஜித் சங்கரை ஆதரித்து கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது அவர் பேசியது …

திமுகவின் பொய் மூட்டைகளை மக்கள் புரிந்து கொண்டுள்ளார்கள். அதிமுக நடப்பு தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறும். நம்முடைய வேட்பாளர் சுர்ஜித் சங்கர் பதவிக்கு வருவதற்கு முன்பே 5000 பேருக்கு வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தித் தந்துள்ளார். எனவும் அவருக்கு புரட்சித் தலைவர் எம்ஜிஆர் மற்றும் புரட்சித் தலைவி அம்மா சின்னமான இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெற செய்ய வேண்டும் என அப்போது அவர் கேட்டுக் கொண்டார்.

மேலும் அவர் தொடர்ந்து பேசுகையில் இந்த மண் உங்கள் மண்ணாக இருக்கலாம் ஸ்டாலின் அவர்களே.. ஆனால் வெல்லப் போவது அதிமுக. மேலும் கடந்த 10 ஆண்டுகால ஆடசி அதிமுகவின் பெண்ணான ஆட்சி எனவும், இந்தியாவிலேயே அதிக கடன் வாங்கும் ஆட்சி திமுகவின் ஆட்சி எனவும்அப்போது அவர் குறிப்பிட்டார்.

எத்தனையோ புயலை பார்த்த ஆட்சி அதிமுக எனவும், ஒரு புயலுக்கே ஸ்டாலின் காணாமல் போய் விட்டார் என அப்போது கடுமையாக திமுக ஆட்சியின் செயல்பாட்டினை குற்றம் சாட்டினார்.

மேலும் தமிழகத்தை மாற்றான் தாய் மனப்பன்மையுடன் பார்த்ததால்தான் தேசிய கட்சிகளுடன் கூட்டணி இல்லை என அதிமுக முடிவு செய்தது. எனவும் மேலும் வேகமாக நிறம் மாறும் கட்சி திமுக என்றார். அதனால்தான் மதிமுக துரை வைகோ வை கூட்டத்தில் அழ வைத்தது  திமுக கூட்டணி எனவும் ஆனால் கூட்டணி தர்மத்தை மதிக்கும் கட்சி அதிமுக எனவும் அப்போது குறிப்பாட்டார்.

10 ஆண்டுகளில் அதிமுக திட்டங்களை நான் பேச தயார்.. 3 ஆண்டுகளில் உங்களுடைய திட்டங்கள் குறித்து மக்கள் முன்னிலையில் பேச தயாரா. என முதலமைச்சர் ஸ்டாலினுக்கு சவாலிட்டார். மேலும் மூன்றாண்டு காலம் செங்கலைத் தூக்கிக் கிட்டு திரியும் அமைச்சர் உதயநிதி. 38 எம்பிக்களும் அதே செங்கல்லை நாடாளுமன்றத்தில் காட்டி இருந்தால் இந் நேரம் தமிழ்நாட்டிற்கு எய்ம்ஸ் மருத்தவமனை வந்திருக்கும் என கிண்டலடித்தார்.

அதனைத் தொடர்ந்து ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஆகியோர் மோடியுடன் பல்லைக் காட்டும் போட்டோக்களை காட்டி யார் பாஜக உடன் கள்ளக் கூட்டணி வைத்துள்ளார்கள் என கேள்வியெழுப்பினார்.

இந்தியாவிலேயே உதவாக்கரை முதலமைச்சர் என்றால் அது ஸ்டாலின் தான் எனவும்,  எதிர்கட்சியாக இருக்கும் போது கோ பேக் மோடி என்கிறீர்கள் இப்போது சிவப்பு கம்பள வரவேற்பு தருவதேன் எனவும், மேலும் 23-ஆம் புலிகேசி போல் வெள்ளைக் கொடி ஏந்திய பொம்மை முதல்வர்தான் ஸ்டாலின்தான் எனவும் மிக கடுமையாக விமர்சனம் செய்தார்.

நாங்கள் பெற்றெடுத்த பிள்ளைக்கு இவர்கள் பெயர் வைக்கிறார்கள். மருத்துவக் கல்லூரி உள்ளிட்ட அனைத்து திட்டங்களையும் கொண்டு வந்தது அதிமுக அரசு என்றார்.

அதிமுக நிர்வாகிகள் நெஞ்சை நிமிர்த்தி ஓட்டு கேட்போம்.. ஆனால் திமுக ஊழல் கட்சி. டெல்டாவில் ஹைட்ரோ கார்பன் திட்டம் துவங்க கையெழுத்து இட்டது ஸ்டாலின். அதை தடை செய்து பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தது அதிமுக.

விவசாயிகளுக்கு விரோதமான அரசு திமுக எனவும், ஆதரவான அரசு அதிமுக. சதுரங்க வேட்டை போல மக்களின் ஆசையை தூண்டி ஆட்சிக்கு வந்து மக்களை ஏமாற்றி விட்டது திமுக அரசு என்று குற்றம் சாட்டினார்.

பள்ளிகளில் படித்த ஏழை மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள் இட ஒதுக்கீடுகள் மூலம் அதிமுக சட்டம் இயற்றி மாணவர்களை மருத்துவர்களாக்கியது .2026 அதிமுக வின் ஆட்சி மீண்டும் அமைவது உறுதி. தற்போதைய நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக வேட்பாளர் சுர்ஜித் சங்கருக்கு வாக்களித்து வெற்றிபெற செய்வோம். ஒற்றை விரலால் ஓங்கி அடிப்போம்.. விடியா திமுக அரசை வீட்டிற்கு அனுப்புவோம் என்றார்.

நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர்கள் இரா. காமராஜ்,  ஓ எஸ் மணியன், ஜீவானந்தம், கழக அமைப்பு செயலாளர்கள் சிவா ராஜமாணிக்கம், ஆசை மணி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here