மீஞ்சூர், ஏப். 01 –
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட நந்தியம்பாக்கம் ஊராட்சிப் பகுதியில் கொங்கியம்மன் நகரில் அமைந்துள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா வித்யாலயா மெட்ரிக்குலேசன் பள்ளியில் 2023 ஆம் ஆண்டுக்கான விளையாட்டு போட்டிகள் நடைப்பெற்று அதில் வெற்றிப்பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கும் விழா அப்பள்ளியின் வளாகத்தில் உள்ள கலையரங்கத்தில் இன்று ஏப் – 01 – ஆம் தேதியன்று நடைபெற்றது.
மேலும் இவ்விழாவிற்கு அப்பள்ளியின் தாளாளர் அருமைநாயகம் தலைமை வகித்தார், பள்ளியின் தலைமை ஆசிரியர் தனலட்சுமி துணை தலைமை ஆசிரியர் சண்முகலட்சுமி உள்ளிட்டவர்கள் முன்னிலை வகித்தனர்.
மேலும், ஸ்ரீ பாலாஜி எனும் அறக்கட்டளையின் பெயரில் இயங்கி வரும் இப்பள்ளியில் எல்கேஜி முதல் பத்தாம் வகுப்பு வரை வகுப்புகள் உள்ளது. மேலும் இப்பள்ளியில் சுமார் 357 மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.
மேலும் இப்பள்ளி மாணவர்களுக்கான இவ்வருடத்திற்கான ஓட்டப்பந்தயம், கூடைப்பந்து, கபடி போட்டி, பாட்டிலில் தண்ணீர் நிரப்புதல், உள்ளிட்ட விளாயாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு அதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கோப்பைகளும் சான்றுகளும் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைப்பெற்றது.
மேலும், அதுப்போன்று மாணவர்களின் பெற்றோர்களுக்கும் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு அவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான ஹால்டிக்கெட் மேடையிலேயே மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.
மேலும் இவ்விழாவினை சிறப்பிக்கும் வகையில் சிறந்த ஆசிரியர்களை தேர்வு செய்து அவர்களை கௌரவிக்கும் விதமாக பொன்னாடை மற்றும் கேடயம் வழங்கப்பட்டது.
மேலும் இவ்விழாவில் ஆசிரியர்கள், மாணவர்களின் பெற்றோர்கள். மாணவர்கள் உள்ளிட்டவர்களும் மற்றும் பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள், கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள் என திரளானவர்கள் பங்கேற்று விழாவினை சிறப்பித்தனர்.























