கும்பகோணம்,சனவரி. 30 –

தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் ..

கும்பகோணம் மாநகரத்தில் மகாத்மா காந்தியின் 75 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி சார்பில் மத நல்லிணக்க உறுதி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

காந்தி மறைந்து 75 ஆண்டுகளுக்கு பின்னரும் அவர் மீதான கோபம் வகுப்பு வாத சக்திகளுக்கு இன்னும் குறையவில்லை எனவும், காந்தி குறித்த கவர்னரின் கருத்துக்கு தமிழ்நாடு முதல்வர் கண்டனம் தெரிவித்துள்ளார்.என நிகழ்ச்சியில் உரை நிகழ்த்தியவர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில் மகாத்மா காந்தியின் 75 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தி.மு.க., சார்பில் மத நல்லிணக்க உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி, தமிழக முழுவதும் நடைபெறும் என அறிவித்திருந்தார்.

அதன் ஒரு பகுதியாக கும்பகோணம் காந்தி பூங்கா முன்பு திமுக கூட்டணி கட்சி சார்பில் மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம், தலைமையில் மத நல்லிணக்க உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

வெகுச் சிறப்பாக நடைப்பெற்ற அந்நிகழ்வில், மத நல்லிணக்கம் சார்பில் திருவடிக்குடிகள் சாமிகள், இமாம் முஹம்மது பாகவி, அருட்தந்தை ஜேம்ஸ், துணை மேயர் தமிழழகன், மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் முத்துசெல்வம், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி மாமன்ற உறுப்பினர் ஐயப்பன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் சின்னை பாண்டியன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் பாரதி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் இளைஞரணி மாவட்ட செயலாளர் சரவணன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில செயலாளர் ஷாஜகான், விடுதலை சிறுத்தை கட்சி மண்டல செயலாளர் விவேகானந்தன், மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் உள்ளிட்ட ஏராளமான பொதுமக்களும் பங்கேற்றனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here