திருவண்ணாமலை, ஆக. 18 –
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் வட்டம் நாடழகானந்தல் கிராமத்தில் வேளாண்துறை மூலம் செயல் படுத்தப்படும் பிரதம மந்திரி நுண்ணுயிர் பாசன திட்டத்தின் விவசாயி சி.கருணாநிதி நிலத்தில் கரும்பு பயிரில் சொட்டுநீர் பாசனம் அமைக்கப் பட்டுள்ளதையும் கரும்பு கரணைகள் நடவினையும் ஆட்சியர் பா.முருகேஷ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த பின்னர் ஏர் உழுது கரும்பு கரணையினை நட்டார். அருகில் வேளாண் இணை இயக்குநர் முருகன் உள்ளார்.மேலும் அங்குள்ள விவசாயிகளின் மத்தியில் மாவட்ட ஆட்சித்தலைவரின் எளிமையான போக்கு அவர்களிடம் உற்சாகத்தையும் ஆரவரத்தையும் ஏற்படுத்தியது.

















