திருவண்ணாமலை, ஆக 15 –

திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள ஆயுதப்படை மைதானத்தில் சுதந்திர தின விழாவில்  தேசிய கொடியினை ஏற்றி வைத்து 11 பயனாளிகளுக்கு ரூ.18.18 இலட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகள் மாவட்ட ஆட்சித் தலைவர்  பா.முருகேஷ் இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்.

திருவண்ணாமலை மாவட்டம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள ஆயுதப்படை மைதானத்தில் இன்று (15.08.2021) நடைபெற்ற  75-வது சுதந்திர தின விழாவில் மாவட்ட ஆட்சித் தலைவர் பா. முருகேஷ், இ.ஆ.ப. அவர்கள் தேசியக் கொடியினை ஏற்றி வைத்து, காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு, சமாதானத்தை குறிக்கும் வகையில் வெண் புறாக்கள் மற்றும் மூன்று வண்ண பலூன்களை பறக்கவிட்டு, காவல் துறையில் சிறப்பாக பணியாற்றிய 76 காவலர்களுக்கு பரிசுக் கேடயம் மற்றம் பாராட்டு சான்றிதழ் வழங்கி, 11 பயனாளிகளுக்கு ரூ.18.18 இலட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கி, பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 710 அரசு அலுவலர்கள், பணியாளர்கள், தனித்திறமையாளர்கள் மற்றும் தன்னார்வ அமைப்புகளுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார்.

திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள ஆயுதப்படை மைதானத்தில் இன்று (15.08.2021) நடைபெற்ற 75-வது சுதந்திர தின விழாவில் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தேசிய கொடியினை ஏற்றி வைத்து, திறந்தவெளி வாகனத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  பவன் குமார் ரெட்டி, இ.கா.ப.,  அவர்களுடன் காவல் துறையினரின் அணிவகுப்பினை பார்வையிட்டு, அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு,  சமாதானத்தை குறிக்கும் வகையில் வெண் புறாக்கள் மற்றும் பலூன்கள் பறக்கவிட்டார்.

இதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அவர்கள், வருவாய்த் துறை மூலம் துறை மூலம் 1 பயனாளிக்கு ரூ.1,02,500 இலட்சம் மதிப்பிலான உழவர் பாதுகாப்புத் திட்ட விபத்து நிவாரணத்தொகையும், 1 பயளாளிக்கு ரூ.50,000 மதிப்பிலான வீட்டுமனைப்பட்டா, மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் 1 பயனாளிக்கு ரூ.7,100 மதிப்பிலான மூன்று சக்கர சைக்கிள், மகளிர் திட்டத்தின் மூலம் 2 பயனாளிகளுக்கு ரூ.12.75 இலட்சம் மதிப்பில் வங்கிக்கடன் இணைப்பு, வேளாண்மைத்துறையின் மூலம் 1 பயனாளிக்கு ரூ.15,000 மதிப்பிலான பயிர் விளைச்சலில் முதல் பரிசு (துவரை), 1 பயனாளிக்கு ரூ.36,176 மதிப்பிலான மழைத்தூவான், 1 பயனாளிக்கு ரூ.300 மதிப்பிலான திரவ உயிர் உரம், 1 பயனாளிக்கு ரூ.7100 மதிப்பிலான விசைத்தெளிப்பான், தோட்டக்கiலை துறையின்  மூலம் 1 பயனாளிக்கு ரூ.1.00 இலட்சம் மதிப்பிலான சேமிப்புக் கிடங்கு மற்றும் உலர்களம், தாட்கோ துறையின் மூலம் 1 பயனாளிக்கு ரூ.2.25 இலட்சம் மதிப்பிலான டூரிஸ்ட் வாகனம், என மொத்தம் 11 பயனாளிகளுக்கு ரூ.18.18 இலட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

இதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அவர்கள் பல்வேறு துறைகளில் சிறப்பாக பணிபுரிந்த அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு கேடயம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார். இதில், வருவாய்த்துறை, நில அளவைத் துறை, காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்பு பணித் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, தேசிய தகவலியல் மையம், வட்டார போக்குவரத்துத்துறை, தகவல் தொழில் நுட்பத்துறை, நகர பஞ்சாயத்து, சித்த மருத்துவம், வேளாண்மைத் துறை, கால்நடை பராமரிப்புத்துறை, தோட்டக்கலைத் துறை, சமூக நலத் துறை, மருத்துவம் மற்றும் நலப் பணிகள், பொது சுகாதாரத் துறை, உணவு பாதுகாப்பு மற்றும் மருத்துவ நிர்வாகத்துறை, 108 ஆம்புலன்ஸ் அவசர சேவை, சித்த மருத்துவம், பள்ளிக் கல்வித் துறை  நெடுஞ்சாலைத் துறை, கோவிட்-19 மேற்பார்வை அலுவலர், கூட்டுறவுத் துறை, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை,  விளையாட்டு மேம்பாட்டுத் துறை, கருவூலம் மற்றும் கணக்குத்துறை, முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம், மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்டம், மாவட்ட தொழில் மையம், கூட்டுறவு ஆவின் பால் உற்பத்தியாளர் சங்கம், தமிழ்நாடு மாசு கட்டுபாட்டு வாரியம், செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், தனித் திறமையாளர்கள், தன்னார்வ அமைப்புகள், என மொத்தம் 710 அரசு அலுவலர்கள், பணியாளர்கள், தன்னார்வ அமைப்புகள் மற்றும் தனித் திறமையாளர்களுக்கு பரிசுக் கேடயம் மற்றம் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பு அலுவலர் பவன் குமார் ரெட்டி, இ.கா.ப., மாவட்ட வருவாய் அலுவலர் இரா. முத்துகுமரசாமி, கூடுதல் ஆட்சியர்,  திட்ட இயக்குநர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை. மு. பிரதாப், இ.ஆ.ப., உதவி ஆட்சியர் (பயிற்சி),. கட்டா ரவி தேஜா, இ.ஆ.ப., அரசு அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் பயனாளிகள் உடன் இருந்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here