மீஞ்சூர் , மார்ச். 23 –
மீஞ்சூர் ஒன்றியத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் நகை கடன் பெற்ற 1683 பயனாளிகளுக்கு ரூ. 5.கோடியே 97 லட்சத்து 23 ஆயிரம் நகைக் கடன்களை தள்ளுபடி செய்து, அடமானம் வைத்திருந்த நகைகளை திரும்ப வழங்கும் விழா நடைப் பெற்றது.
தமிழக அரசு தேர்தல் நேரத்தில் வாக்குறுதிகளாக அளித்த நகை கடன் தள்ளுபடி கோரிக்கையை நிறைவேற்றும் வகையில். அதற்கான அரசாணை பிறப்பித்துள்ளது. அதனடிப்படையில் நாடு முழுவதிலும் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க வங்கிகளில் மக்கள் அடமானம் வைத்திருந்த நகைகளை அவர்களுக்கு திரும்ப அளிக்கும் விழா நடைபெற்று வருகிறது.
அதேபோன்று திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஒன்றியத்தில் அடங்கிய காட்டாவூர். மெத்தூர். கோளூர். தேவம்பட்டு உள்ளிட்ட தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் தங்க நகை கடன் தள்ளுபடி விழா நடைபெற்றது. விழாவிற்கு மீஞ்சூர் ஒன்றிய பெருந்தலைவர் அத்திப்பட்டு .ஜி. ரவி. தலைமை வகித்தார்.
மீஞ்சூர் திமுக ஒன்றிய கழகச் செயலாளர் சுகுமாரன். மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினர் கதிரவன் . உள்ளிட்டவர்கள் முன்னிலை வகித்தனர் .இதில் காட்டாவூர். தேவம்பட்டு வங்கிகளில் 1054 பயனாளிகளுக்கு 3 கோடியே 42 லட்சத்து 70 ஆயிரம் ரூபாயும், மெத்தூர். கோளூர். கூட்டுறவு வங்கிகளில் 629 பயனாளிகளுக்கு 2 கோடியை 54 லட்சத்து 53 ஆயிரம் ரூபாய் தங்க நகை கடன்களை தள்ளுபடி செய்து பயனாளிகளுக்கு நகைகளை வழங்கினர்.
இதில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களின் பொறுப்பாளர்கள் பாஸ்கரன். திருப்பதி .மகாலிங்கம். துரைராஜ் .மங்கைஉமாபதி. சசிகுமார். ரவிச்சந்திரன் சிலம்பரசன் திருப்பதி ரவீந்திரன் செல்வம் உள்ளிட்டோரும் ஒன்றிய கவுன்சிலர்கள் நந்தியம்பாக்கம் கதிரவன் .ஜமுனாரஜினி. ரமேஷ் ஊராட்சி மன்ற தலைவர்கள் ஜெகதீசன். ராஜேஷ். உள்ளிட்ட திரளான கட்சித் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.























