திருவண்ணாமலை ஜூலை-15- உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின்கீழ் பெறப்பட்ட கோரிக்கைகள் மீதான நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் கடந்த ஜூலை 13 ஆம் தேதி ஆய்வு நடத்தினார். உங்கள் தொகுதியில் முதலமைச்சர் எனும் திட்டத்தின் கீழ் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. அந்த மனுக்கள் அனைத்தும் துறை அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. மேலும் பொதுமக்கள் அளித்துள்ள கோரிக்கை மனுக்கள் மீது அதிகாரிகள் விசாரணை நடத்தி தகுதியான மனுக்களுக்கு உரிய பயன்களை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. இந் நிலையில் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் பெறப்பட்ட கோரிக்கைகள் மீது மேற் கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரகத்தில் அதிகாரிகளுடன் மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் ஆய்வு நடத்தினார். அதில் மாவட்ட வருவாய் அலுவலர் இரா.முத்துகுமாரசாமி, கூடுதல் ஆட்சியர் மு.பிரதாப் உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். அப்போது உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் பெறப்பட்ட கோரிக்கைகள் மீது துறை அதிகாரிகள் மேற் கொண்ட நடவடிக்கைகள் குறித்து 15 நாட்களுக்குள் அறிக்கை அளிக்க வேண்டுமென ஆட்சியர் கேட்டுக்கொண்டார்.
முகப்பு மாவட்டம் திருவண்ணாமலை உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின்கீழ் பெறப்பட்ட கோரிக்கை மனு மீதான நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் திருவண்ணாமலை...